சாமிக்கு வாங்கும் மல்லிகை பூவை 1 மாதம் ஆனாலும் வாடாமல் வைத்திருக்க என்ன செய்வது? தினமும் இறையருளை பெற சூப்பர் டிப்ஸ்!

malli-poo-pooja-room
- Advertisement -

தினமும் சாமிக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் குடும்பம் சுபீட்சமாக இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக சாமி படங்களை சுத்தம் செய்து அலங்கரித்து, புத்தம் புது வாசனை மிகுந்த மலர்களை சாற்றி வைப்போம். பூஜைக்கு உரிய பூக்களை முன்னரே வாங்கி வைப்பது சிலருடைய வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி வாங்க கூடிய பூக்களில் பெரும்பாலும் மல்லிகை இடம் பெறுகிறது. இந்த மல்லிகை பூவை ஒரு மாதம் ஆனாலும் வாடி வதங்காமல் அப்படியே பிரஷ் ஆக வைத்திருக்கிற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மல்லிகை பூவை நீங்கள் கட்டிய பூவாக வாங்குவதை விட வாங்கி கட்டுவது தான் நல்லது. அதிக முழமும் இதனால் நமக்கு கிடைக்கும். வாங்கும் பொழுதே மொட்டாக வாங்கி விடுவது நல்லது. இதனால் நீண்ட நாட்களுக்கு இதை பிரஷ்ஷாக வைத்திருக்க முடியும். அழகாய் கோர்த்த இந்த மல்லிகை பூவை ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாட்களுக்கு பத்திரப்படுத்த ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பாத்திரத்திற்குள் வாழை இலையை விரித்து வையுங்கள். இலையின் மீது இந்த பூவை வைத்து வாழை இலையின் காம்பு பகுதிகளை வெட்டி பூக்களை சுற்றிலும் போட்டுக் கொள்ளுங்கள். பூவின் மீதும் ஒரு சிறு வாழை இலையை போட்டு போ தெரியாதவாறு மூடி வைக்க வேண்டும். பின்பு பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி பிரிட்ஜில் வைத்து விட்டால் 20 நாட்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழை இலை கிடைக்காதவர்கள் ஒரு டிஷ்யூ பேப்பர் கொண்டு மல்லிகை பூவை நன்கு சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதன் மீது ஒரு நியூஸ் பேப்பரை இதே போல சுற்றி எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 லிருந்து 15 நாட்கள் வரை அப்படியே இருக்கும். எல்லோரிடமும் பிரிட்ஜ் இருக்கும் என்று சொல்ல முடியாது. பிரிட்ஜ் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?

- Advertisement -

ஃப்ரிட்ஜ் இல்லாமல் வெளியிலேயே வைத்து பாதுகாக்க ஒரு சில்வர் பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது இதே போல வாழை இலையை விரித்து பூவை வைத்து அதன் மீது மெல்லிய துணிப்பை ஒன்றை நனைத்து மூடி வையுங்கள். தினமும் காலை, மாலை தண்ணீரை தெளித்து துணிப்பையை ஈரப்படுத்திக் கொண்டே இருந்தால் நீண்ட நாட்களுக்கு பிரஷ் ஆக பூ அப்படியே இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
வேண்டாம் என்று தூக்கி எறியும் கொட்டாங்குச்சி இருந்தால் போதும் வெள்ளி பாத்திரங்கள் அனைத்தும் புதுசு போல ஜொலிக்க 5 நிமிடம் கூட ஆகாது தெரியுமா?

வாழை இலை இல்லாதவர்கள் மெல்லிய துணிப்பை எடுத்து அதை தண்ணீரில் நனைத்து பிழிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து இப்பொழுது மெல்லிய வெள்ளை நிற துணிப்பையை கொடுக்கிறார்கள், இதை பயன்படுத்துவது நல்லது. இந்தத் துணி பைக்குள் பூவை வைத்து லேசாக சுற்றிக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு சில்வர் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் தெளித்து வந்தால் போதும், 10 நாட்களுக்கு அப்படியே பிரஷ் ஆக பூ இருக்கும். வீட்டில் வெயில் படாத நிழலான பகுதியில் இதை வையுங்கள். நீண்ட நாட்களுக்கு பூவை பாதுகாப்பதால் தினமும் கொஞ்சம் கொஞ்சம் பூவை கத்தரித்து படங்களுக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் அதிகரிக்கும், இதனால் இறை அருளும் நமக்கு தினமும் கிடைக்கும்.

- Advertisement -