வேண்டாம் என்று தூக்கி எறியும் கொட்டாங்குச்சி இருந்தால் போதும் வெள்ளி பாத்திரங்கள் அனைத்தும் புதுசு போல ஜொலிக்க 5 நிமிடம் கூட ஆகாது தெரியுமா?

coconut-shell-silver-items
- Advertisement -

வீட்டில் வெள்ளி பாத்திரங்கள் அதிகம் இருந்தால் அதை பத்திரப்படுத்துவது, பளபளப்பாக வைத்திருப்பது என்பது தான் சற்று சிரமமான காரியமாக இருக்கும். குறிப்பாக பூஜை பொருட்கள் வெள்ளிப் பொருட்களில் அமைந்து விட்டால் அவ்வளவுதான்! வெள்ளி பொருட்கள் பொதுவாக சீக்கிரமே கருமை படர்ந்து அதன் பளபளப்பான வெண்மை நிறத்தை இழந்து விடும். மங்கிப் போய் காணப்படும் இந்த வெள்ளி பாத்திரங்களை 10 நிமிடம் கூட தேய்க்காமல் ரொம்ப சுலபமாக சுத்தம் செய்ய என்ன செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நுண்ணிய வேலைப்பாடுகள் உள்ள வெள்ளி பொருட்களை சுத்தம் செய்வது தான் இருப்பதிலேயே கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட இண்டு, இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் கருமையை கூட விரட்டி அடிக்க கூடிய அற்புதமான பவர் இதற்கு உண்டு. நாம் சமையல் செய்யும் பொழுது அடிக்கடி பயன்படுத்தும் தேங்காயை, உடைத்து விட்டு கொட்டாங்குச்சியை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இந்த கொட்டாங்குச்சியில் ஏராளமான விஷயங்களை நாம் செய்ய முடியும். அதில் வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்வதும் ஒன்று!

- Advertisement -

கொட்டாங்குச்சியை வைத்து சாம்பிராணி தூபம் போடலாம். அப்படி சாம்பிராணி தூபம் போடுவதற்கு கொட்டாங்குச்சியை முதலில் அடுப்பில் வைத்து எரிய வைப்போம் அல்லவா? அதே போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்துவிட்டு அந்த நெருப்பில் கொண்டு போய் கொட்டாங்குச்சியை வையுங்கள். கொஞ்ச நேரத்திலேயே தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கும். பிறகு கொட்டாங்குச்சியை எடுத்து தூப காலில் வைத்துக் கொள்ளுங்கள்.

கொட்டாங்குச்சி முழுவதுமாக எரிந்து கொஞ்ச நேரத்திலேயே துண்டு துண்டாக தணல் போல எரிய ஆரம்பிக்கும். இந்த தணல் தனிவதற்கு ரெண்டு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். அரை மூடி எலுமிச்சைச் சாறை அப்படியே பிழிந்து விட்டால் எரியும் தணல் சற்று குளிர ஆரம்பிக்கும். தணல் முழுவதும் குளிர்ந்ததும் அதை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியை இயக்கி பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த பவுடருடன் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஏதாவது ஒரு லிக்விட் அல்லது சோப்பு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சோப்பிற்கு பதிலாக வெள்ளை நிற டூத் பேஸ்ட்டை கூட இதற்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

பின்னர் வெள்ளி பாத்திரங்களில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்குகளை ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பரை வைத்து நன்கு துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வெள்ளி விளக்குகளில் இதை கட்டாயம் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் தயாரித்து வைத்துள்ள இந்த பேஸ்ட்டை வைத்து ஒரு டூத் பிரஷ்சை கொண்டு லேசாக எல்லா இடங்களிலும் புகும்படி தேய்த்து கொடுத்தால் போதும், கொஞ்ச நேரத்திலேயே பாத்திரங்கள் அவ்வளவு சுத்தமாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டு பாவப்பட்ட ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய ஒரு ஈஸியான ஐடியா! இதை தெரிஞ்சுகிட்டா கை வலிக்காமல் ஃபிரிட்ஜை புதுசு போல மாத்தலாம்.

இந்த பேஸ்ட்டை வைத்து தேய்த்த புபிறகு சிறிது நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் நன்கு ஊறிய பின்பு தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சுத்தமான காட்டன் துணியை வைத்து துடைத்து எடுத்தால் நீங்கள் புதிதாக வாங்கும் பொழுது எப்படி வெள்ளி பொருட்கள் பளபளன்னு இருந்ததோ அதே போலவே இருக்கும். இப்படி செய்யும் பொழுது சீக்கிரம் கருமையும் படராது. இம்முறையில் வெள்ளி கொலுசு, வெள்ளி நகைகளை கூட பளிச்சிட செய்யலாம். பூஜை பொருட்கள் அனைத்தும் பளபளன்னு ரொம்ப நாட்களுக்கு ஜொலிக்க ட்ரை இப்படி நீங்கள் பண்ணி பாருங்க உங்களையும் ஆச்சரியப்பட வைக்கும்.

- Advertisement -