எந்த உரம் கொடுத்தும் உங்க மல்லி செடி பூக்கவில்லையா? அப்படியானால், இப்படி செய்த பின் இந்த உரத்தை கொடுத்துப் பாருங்கள். மல்லி செடி கொத்துக் கொத்தாக பூத்து குலுங்கும்

- Advertisement -

நாம் வீட்டில் வளர்க்கும் செடிகள் எல்லாமே எப்போதும் பூத்து கொண்டு இருந்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும். அனால்  எல்லா செடியும் அப்படி அதிக பூக்களை கொடுப்பதில்லை, சில செடிகள் கிளைகள் வைத்து வளரும் வரை நன்றாகத் தான் இருக்கும், ஆனால் மொட்டுக்கள் வைக்காது வைத்தாலும் மிகவும் சின்னதாக வைத்து உதிர்ந்து விடும். இந்த செடிகளை எப்படி பராமரித்து எந்த உரத்தை கொடுத்தால் கிளைகள் வைத்து பூக்கள் பூக்கும் அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மல்லி செடிகளை பொறுத்த வரையில் நல்ல வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டும். இதற்கு நேரடியாக சூரிய ஒளி பட்டால் கூட பாதிப்பு இருக்காது, வெயில் பட்டால் தான் இந்த செடி நன்றாகவே வளரும். எனவே மல்லி செடிகளைவெயில் படும் இடங்களில் வைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து செடிகள் ஒரு முறை பூத்து முடித்தவுடன் கண்டிப்பாக பூ மொட்டு வைத்த கிளை பகுதிகளுக்கு இரண்டு இலைக்கு கீழே இடைவெளி விட்டு செடியை வெட்டி விட்டால் மட்டுமே அடுத்த முறை புதிய கிளைகள் வந்து அதில் அதிக மொட்டுக்கள் வைக்கும். இந்த விஷயத்தை நீங்கள் செய்யாமல் விட்டால் செடிகள் வளருமே தவிர பூக்கள் வராது.

அதே போல் ரோஜா செடியில் ஏழு இலைகள் வரும் கிளையை நாம் நறுக்கி விடுவோம், ஏனென்றால் அதில் பூக்கள் வைக்காது. அதே போல் மல்லி செடியிலும் கொடி போல ஒரு சில கிளைகள் வளரும், இந்த இலைகளை பார்த்த உடனே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். ஏற்கனவே நாம் வைத்திருக்கும் செடியில் உள்ள இலைகளும் இதுவும் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். இந்த கிளைகளை ஆரம்பத்திலேயே வெட்டி விடுங்கள். இது பெரியதாக கிளை வளருமே தவிர இதில் மொட்டுக்கள் வைக்காது இப்படி இருந்தாலும் சரி பூக்காது.

- Advertisement -

இந்த மல்லி செடிகளை பொறுத்தவரையில் கண்டிப்பாக வேப்ப எண்ணெய் உரத்தை கொடுக்க வேண்டும் அப்போது தான் இதில் பூச்சிகள் வைக்காது மற்ற செடிகளை விட இன்னும் மல்லி செடிக்கு வேப்ப எண்ணெய் உரம் மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி ஆட்டுப் புழுக்கை, கம்போஸ்ட்டு உரம் போன்றவை இந்தச் செடிகளுக்கு கொடுத்து வரலாம் . இதன் மூலமும் செடியின் வேர் வரை சத்துக்கள் சென்று பூக்கள் அதிகம் பூக்கும் இதற்காக தனியாக எந்த உரத்தையும் வாங்கி போட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த முறைகளுடன் நீங்கள் வீட்டில் தானியங்கள், பயிறு வகைகள் ஊற வைத்து செய்யும் போது இரவு முழுவதும் ஊறிய அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் அதை இந்த மல்லி செடிகளுக்கு கொடுத்துப் பாருங்கள். அத்தனை சத்துக்கள் அந்த தண்ணீரில் உண்டு இதை கொடுக்கும் போது செடிகள் நிச்சயமாக அதிக கிளைகள் வைத்து புதிய மொட்டுக்கள் வைத்து பூக்கும். இனி இது போன்ற தண்ணீரை வீணாக ஊற்றாமல் அதைச் செடிகளுக்கு நல்ல உரமாக பயன்படுத்துங்கள்.

இத்துடன் சேர்த்து வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தியம் எடுத்து அதை ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஊறினால் கூட போதும் அந்தத் தண்ணீரை வடிகட்டி ஊற்றி விடுங்கள், அல்லது அதை அரைத்து பிறகு கரைத்தும் கூட ஊற்றலாம். இந்த உரம் மல்லி செடிகள் பூ அதிக அளவில் வைக்க உதவும். இதை வாரம் ஒரு முறை செய்து இருந்தால் போதும் பூக்காத செடிகளில் கூட புதிதாக மொட்டுகள் வைத்து பூக்க ஆரம்பிக்கும்.

மல்லி செடிகளை பொறுத்த வரையில் நாம் வீட்டில் தேவை இல்லை தூக்கி போடும் பொருட்களை வாழைப்பழத் தோல், கம்போஸ்ட்டுடன், அரிசி பருப்பு கழுவிய தண்ணீர், ஆட்டுப் புழுக்கை, கோழி உரம் இது போல நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் உரங்களை மட்டுமே கொடுத்து நல்ல வெயில் படும் இடத்தில் வைத்து கிளைகள் வரும் போது வெட்டி விட்டு வளர்த்தாலே போதும் மல்லி செடி நன்றாக வளர்ந்து அதிக பூக்களை கொடுக்கும். உங்கள் வீட்டில் வளர்க்கும் செடிகளையும் நீங்கள் இதே முறையில் பராமரித்து பாருங்கள் நிச்சயம் பூக்கள் அதிகம் பூக்கும்

- Advertisement -