வாங்கி வந்த மாம்பழம் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்க, இப்படி ஒரு ஐடியாவை எங்கு தேடினாலும் கிடைக்காது.

mango
- Advertisement -

இந்த சீசன் மாம்பழ சீசன். மாங்காய் சீசன். மாம்பழத்தை வைத்தும் மாங்காயை வைத்தும் தான் இரண்டு பயனுள்ள வீட்டு குறிப்பை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சொன்னால் நம்பவே மாட்டீங்க. இந்த குறிப்பை நீங்கள் முயற்சி செய்தால் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள். அந்த அளவுக்கு சூப்பரான குறிப்பு. இதுவரைக்கும் கேள்வி படாத குறிப்பு கூட. இத மிஸ் பண்ணாம படிச்சு பாருங்க. படிச்சவுடன் முயற்சி செய்தும் பாருங்கள். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். வாங்க நேரத்தை கடாக்காமல் குறிப்புக்குள் செல்லலாம்.

மாம்பழம் கெட்டுப்போகாமல் இருக்க:
முதல் குறிப்பாக மாம்பழத்தை பற்றி பார்த்து விடுவோம். மாம்பழத்தை வாங்கி வீட்டில் வைத்ததும் பார்ப்பதற்கு அந்த மாம்பழம் மஞ்சள் நிறத்தில் சூப்பராக தான் இருக்கும். ஆனால் அடுத்த நாளே பார்த்தால் சில மாம்பழத்தில் காம்பு பகுதிகள் சீக்கிரம் அழுகிப்போக ஆரம்பிக்கும். காம்பு பகுதி தான் முதல் முதலாக கருத்துப் போகத் தொடங்கும். பிறகு அந்த மாம்பழம் காயாகவே இருந்தாலும் அதை நாம் வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

- Advertisement -

இந்த காம்பு பகுதியில் கருப்பு நிறம் வராமல் அழுகாமல் மாம்பழத்தை பாதுகாப்பது எப்படி. வாங்கி வந்த மாம்பழத்தை சுத்தமாக தண்ணீரில் கழுவி விடுங்கள். காம்பு பகுதியில் இருக்கும் பால் அனைத்தும் நீங்கும் படி கழுவி விடுங்கள். பிறகுசுத்தமான துணியை கொண்டு மாம்பழத்தை துடைத்து விடுங்கள். ஈரம் இல்லாத மாம்பழத்தின் காம்பு பகுதியில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவி வைத்தால், மாம்பழம் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.

சரி, மாங்காவை வைத்து இன்னொரு சூப்பரான வீட்டு குறிப்பு. மாங்காய் சீசனில் 10 ரூபாய்க்கு கூட மலிவாக மாங்காய் நமக்கு கிடைக்கும். வாங்கி சமையலுக்கு பயன்படுத்தியது போக மீதி அந்த கொட்டையோ அல்லது சிறிய பத்தையோ இருந்தால் அதை என்ன செய்வது. இப்படி பயன்படுத்தி பார்க்கலாமே. அந்த மாங்காயை நன்றாக துருவி கொள்ளுங்கள்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் துருவிய மாங்காய் 1 கைப்பிடி அளவு, ஷாம்பு 1 ஸ்பூன், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது பவுடர் போட்டு 1 ஸ்பூன் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை நாம் எப்படி பயன்படுத்த போகிறோம். பாத்திரம் தேய்க்கத்தான். வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரம், பித்தளை பாத்திரம், அலுமினிய பாத்திரம், சில்வர் பாத்திரம் இவைகளை எல்லாம் இந்த மாங்காய் பேஸ்டை கொண்டு தேய்த்து பார்த்தால் அப்படியே நீங்க ஷாக் ஆயிடுவீங்க. எல்லா பாத்திரம் புதுசு போல பளபளக்கும் பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்ய, இனி வடித்த கஞ்சி தண்ணீரை தேடி அலைய வேண்டாம். இதோ ஒரு புது ஐடியா?

உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை காமாட்சியம்மன் விளக்கில் இந்த பேஸ்ட்டை தடவி 5 நிமிடம் ஊற விட்டு தேய்த்து கழுவி பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். வீட்டில் ரொம்ப நாட்களாக பயன்படுத்தாத அலுமினிய கடாய், அலுமினிய டபரா என்று இருக்கும் அல்லவா, ரொம்ப நாள் பயன்படுத்தாத அலுமினிய பாத்திரங்கள் அப்படியே உப்பு பூத்தது போல ஆகிவிடும். அதற்கு மேலே இந்த பேஸ்ட்டை தடவி சுத்தம் செய்து பாருங்கள். சில்வர் பாத்திரம் அடிபிடித்து இருந்தாலும் அல்லது சமைத்து சமைத்து ரொம்ப பழசாகிப் போன சில்வர் பாத்திரங்கள் இருந்தாலும் அதை இந்த பேஸ்ட்டை கொண்டு சுத்தம் செய்து பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். எப்போதும் போல பச்சை நிற நாரில் இந்த பேஸ்ட்டை தொட்டு, கருத்து போன பாத்திரத்தை தேய்க்க வேண்டும் அவ்வளவுதான். பயனுள்ள இந்த இரண்டு வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா கட்டாயம் ட்ரை பண்ணி பாக்கணும்.

- Advertisement -