இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்ய, இனி வடித்த கஞ்சி தண்ணீரை தேடி அலைய வேண்டாம். இதோ ஒரு புது ஐடியா?

- Advertisement -

நாம் எல்லோர் வீட்டிலும் புதியதாக தோசை சுடுவதற்கு இரும்பில் தோசைக்கல் வாங்கினால், அதை பழகுவதற்குள் போதும் போதும் என ஆகும். இப்போது எல்லோரும் குக்கரில் சாதம் வைக்கின்றோம். வடித்த கஞ்சிக்கு அக்கம் பக்கத்து வீட்டில் போய் கடன் கேட்க வேண்டிய சூழ்நிலை. வடித்த கஞ்சி இல்லாமல், அரிசி கழுவிய தண்ணீர் இல்லாமல், தோசை கல்லை எளிமையான முறையில் பழக ஒரு புது ஐடியாவை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த ஐடியாவை படித்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் புதிய தோசைக்கல் வாங்கினால் இந்த ஐடியாவை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக உபயோகமான குறிப்பாக தான் இருக்கும்.

புது இரும்பு தோசை கல்லை பழக புது ஐடியா:
புதுசாக இருக்கக்கூடிய இருப்பு தோசை கல் மேலே துருப்பிடித்து இருக்கும். வாங்கி வந்த தோசை கல்லுக்கு மேலே கொஞ்சமாக வெல்லத்தை பொடித்து, தூள் செய்து தூவி விடுங்கள். அந்த வெல்லத்தை தோசை கல் முழுவதும் தடவி விட வேண்டும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு வெல்லத்தை நசுக்கி தோசை கல்லில் தடவி அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் பார்த்தால் வெல்லம் அனைத்தும் இறுகிப்போய், காய்ந்து போய் அந்த தோசை கல்லில் ஒட்டி இருக்கும்.

- Advertisement -

மீண்டும் லேசாக இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, மீண்டும் அதே வெல்லத்தை தோசை கல் முழுவதும் தடவி விட வேண்டும். இதே போல 7 நாள் தொடர்ந்து செய்ய வேண்டும். புதுசாக வெல்லம் சேர்க்க வேண்டாம். முதல் நாள் போட்ட காய்ந்த வெல்லத்துக்கு மேலேயே 2 ஸ்பூன் தண்ணீரை ஊற்றி தடவி தடவி தோசை கல்லை ஓரமாக எடுத்து வைத்து விடுங்கள்.

ஏழாவது நாள் தோசை கல்லில் இருக்கும் துரு கறி எல்லாம் அப்படியே ஊறி வந்திருக்கும். பாத்திரம் தேய்க்கும் லிக்விட் போட்டு ஸ்டீல் நாரை போட்டு தேய்த்து இரண்டிலிருந்து மூன்று முறை சுத்தமாக தோசை கல்லை கழுவி விடுங்கள். பிறகு இதை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்யுங்கள். சூடு செய்த தோசை கல்லில் உங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி ஒரு காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். இரண்டு முறை இப்படி சூடான தோசை கல்லின் மேல் எண்ணெய் ஊற்றி துடைத்து எடுத்து விடவும். துடைத்தெடுத்த காட்டன் காட்டன் துணியில் எல்லா துரு கறை எல்லாம் வந்திருக்கும் பாருங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சமையலுக்கு பயன்படுத்தும் புளி அல்லது வெங்காயம் இந்த இரண்டு பொருட்களில் எதை வேண்டும் என்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தவாவில் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெயை, வெட்டிய வெங்காயத்தைக் கொண்டு நன்றாக மீண்டும் ஒரு முறை துடைத்து விடுங்கள்.

அதில் இப்போது இறுதியாக இருக்கக்கூடிய துரு கறையை எல்லாம் ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்து எடுத்துவிட்டு, மீண்டும் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வைத்து தேய்த்து கல்தோசை வார்க்கலாம். நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டை ஆம்லெட் போடலாம். எதுவாக இருந்தாலும் முதலில் சுடக்கூடிய இரண்டு தோசைகளை உங்களால் சாப்பிட முடியாது. அதில் துரு வாசம் வீச தான் செய்யும். இரண்டு தோசைகளை சுட்டு அதை குப்பையில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 2 பொருள் இருந்தால் போதும் சூப்பரான சப்பு கொட்டும் சுவையில் தக்காளி சட்னி ஈசியாக தயாரிக்கலாமே! சட்னி செய்ய இனி எதுக்கு கஷ்டப்படணும்?

மீண்டும் தோசைக்கல் மேல் எண்ணெய் ஊற்றி துடைத்து விட்டு மெல்லிசாக பேப்பர் ரோஸ்ட் ஊற்றினால் கூட தோசை கல்லில் தோசை ஒட்டாமல் சூப்பராக வரும். இந்த தோசையை நீங்கள் சாப்பிடலாம். முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் பழைய தோசைக்கல் துருப்பிடித்து இருந்தாலும், அதை இந்த முறையில் சுத்தம் செய்தால் தோசை கல் சூப்பராக தயாராகிவிடும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -