மண் சட்டியை பயன்படுத்த ஆசை இருந்தும் அதை பழக்குறது கஷ்டம்ன்னு நினைக்கிறீங்களா? இதோ ரொம்ப சீக்கரம் மண்சட்டியை பழகி காலத்துக்கும் உடையாமல் இருக்கு சூப்பர் ட்ரிக்ஸ் இருக்க. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

இன்றைய நாகரீக காலத்திலும் அவசர கால சூழலிலும் பழமைகளை எல்லாம் மறந்து புதுமைகளின் புகுத்த ஆரம்பித்து விட்டோம். பழையவனவற்றை தூக்கிப் போட வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. நேரமின்மை காரணத்தினால் வேலைகளை விரைவாக முடிக்க சிலவற்றை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியதா இருக்கிறது. அப்படி மாறிப் போன ஒரு விஷயம் தான் மண் சட்டியில் சமைப்பது. இன்றைய தலைமுறையினருக்கும் மண் சட்டியில் சமைத்து சாப்பிட ஆசை இருந்தாலும், அதை சரியான முறையில் பழக்க வேண்டும் அதே நேரத்தில் அதை சரியாக கையாள வேண்டும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறார்கள். மண் சட்டியை பழக்கி நீண்ட நாட்கள் அதை உடையாமல் பாதுகாப்பது பற்றி இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மண் சட்டியை வாங்கியவுடன் அதை வெறும் தண்ணீரில் ஊற வைப்பார்கள். அப்படி செய்வதை காட்டிலும் ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த தண்ணீரை முதலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் நீங்கள் புதிதாக வாங்கிய மண் சட்டியை வைத்து அது முழுவதும் சாதம் வடித்த தண்ணீர் ஊற்றி விடுங்கள். இப்போது அடியில் இருக்கும் பாத்திரத்தின் விளிம்பு வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இதை ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

அடுத்த நாள் காலை இந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு ஒரு முறை லேசாக அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு தேங்காய் எண்ணெயை சட்டியின் உள்புறம், வெளிப்புறம் என அனைத்து பக்கத்திலும் தாராளமாக தேய்த்து சிறிது நேரம் கழித்து துடைத்து விடுங்கள்.

அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் கடலை மாவு மூன்றையும் பேஸ்ட் போல குழைத்து இதை பாத்திரத்தில் உள்ளே முழுவதும் தேய்த்து வைத்து விடுங்கள். நாம் மண் சட்டியை எவ்வளவு சுத்தம் செய்தாலும் சமைக்கும் போது அதில் மண் வாடை வரும் இதை செய்வதன் மூலம் மண் வாடை வராது.

- Advertisement -

அடுத்து இதை வெறும் தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு மண் சட்டியை அடுப்பில் வைத்து மறுபடியும் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிய பிறகு வாழை மட்டையை வைத்து நன்றாக தேய்த்துக் கொடுங்கள். வாழை மட்டை கிடைக்காத பட்சத்தில் வாழை இலையை வைத்தும் தேய்க்கலாம். இலையை வைத்து கவனமாக தேய்த்து கொடுங்கள்.

அடுத்து வாழை இலையை வைத்து தேய்த்து பிறகு மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி ஒரு முட்டையை உடைத்து ஊற்றுங்கள். அதை சட்டியின் அனைத்து பக்கமும் படும் மாறும் முட்டை வேகுவதற்குள்ளாகவே தேய்த்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் சட்டியை நீங்கள் ஒரு முறை சமைத்த பின் மீண்டும் சமைக்க அடுப்பில் வைத்தால் அதிலிருந்து எண்ணெய் படிவது போல இருக்கும். முதலில் முட்டையை ஊற்றி எடுக்கும் போது அது போல வராது.

- Advertisement -

இப்போது இந்த முட்டையை சட்டியில் இருந்து எடுத்த பிறகு மீண்டும் கொஞ்சமாக கடலை மாவு கொஞ்சம் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் சேர்த்து ஒரு முறை நன்றாக கழுவிய பிறகு இப்பொழுது அடுப்பில் வைத்து சமைக்க ஆரம்பிக்கலாம். மண்சட்டி பொறுத்த வரையில் அசைவ வகைகளை சமைத்த பிறகு தேக்கும் போது மட்டும் சோப்புகளை பயன்படுத்துங்கள். அசைவம் சமைக்காத நாட்கள் வெறும் கடலை மாவை மட்டும் போட்டு சுத்தம் செய்தாலே மண்சட்டி வாடை வராமல் அதிக நாட்கள் உழைக்கும்.

இதையும் படிக்கலாமே: புத்திசாலி இல்லத்தரசிகள் இப்படித்தான் யோசிப்பாங்க. கூடை கூடையாய் இருக்கும் அழுக்கு துணிகளில், கை வைக்காமல் பளிச்சென்று வெள்ளையாக மாற்ற சூப்பர் ஐடியாங்க இது.

ஒரு மண்சட்டியை இத்தனை செய்து பழகி தான் பயன்படுத்த வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம். இதற்க்கு எப்போதும் பயன்படுத்தும் முறை போல இரண்டு, மூன்று நாட்கள் எல்லாம் தேவையில்லை ஒரு இரவிலே இதை பழகி விடலாம். அது மட்டும் இன்றி ஆரோக்கியத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்யும் நாம் இது போன்ற விஷயங்களுக்காக சிறிது நேரம் செலவிடுவதில் தவறில்லை. இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் மண்சட்டி வாங்கி பழகி பயன்படுத்தி ஆரோக்கியமாக இருங்கள்.

- Advertisement -