- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமன அழுத்தம் நீக்கும் முருகன் பாடல்

மன அழுத்தம் நீக்கும் முருகன் பாடல்

- Advertisement -

மன அழுத்தம் ஆனது நமக்குள் வந்து விட்டால், முதலில் கெட்டுப் போவது நிம்மதியான தூக்கம் தான். இரவு நல்ல தூக்கம் இல்லை என்றால், ஒரு மனிதரால் பகல் பொழுதில் சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியாது. பகலில் செய்யக்கூடிய வேலை எல்லாம் கெட்டுப் போகும். ஒரு மன அழுத்தம் பல வகையான நோய்களை நம் உடம்புக்குள் அழையா விருந்தாளியாக அழைத்து கொண்டு வந்து விடும்.

இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட இன்று பெரிய பெரிய மருத்துவர்கள், பெரிய பெரிய சிகிச்சைகள், தூக்க மாத்திரைகள் என்று எவ்வளவோ வந்துவிட்டது. இந்த நவீன மயமான உலகத்தில், இந்த மருத்துவம், மன அழுத்தத்தை முழுமையாக நீக்குகிறதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. மன அழுத்தத்திற்காக நீங்கள் மருந்து மாத்திரை சாப்பிட துவங்கி விட்டால், இறுதி காலம் வரை அந்த மருந்து மாத்திரையை தொடர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். சரி போகட்டும்.

- Advertisement -

நீங்கள் தீராமன அழுத்தத்தில் சிக்கி இருந்தால், இன்றைய தினம் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஏங்க லட்ச லட்சமா பணம் செலவு செய்து, பெரிய பெரிய படிப்பு படித்த டாக்டரிடம் சென்று குணமடையாத இந்த மன அழுத்தத்திற்கு, இந்த ஒரு பாடல் தீர்வு தருமா என்ன? அதுதான் நாம் செய்யும் தவறு. நக்கீரனுக்கு இருந்த பெரிய மன அழுத்தத்தை குறைத்த பாடல் இது.

முருகனைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இதை கண்டுபிடித்து இருப்பீர்கள். ஆம், திருமுருகாற்றுப்படை பாடல். எவ்வளவு பெரிய மன அழுத்தத்தையும் போக்கக்கூடிய பாடல் தான் இது. திருமுருகாற்றுப்படை செய்யுளை அவ்வளவு எளிதில் நம்மால் படிக்க முடியாது தான். சரி, திருமுருகாற்றுப்படை பாடலை ஒலிக்க விட்டு நம் காதுகளால் கேட்க முடியும். இப்பொழுது இதற்கான வசதியும் நம் கைபேசியிலேயே இருக்கிறது. யூடியூபில் திருமுருகாற்றுப்படை பாடல் என்ற டைப் செய்து, அந்த பாடலை தினமும் காலையில் வீட்டில் ஒலிக்க விடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வேலையை நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், எழுந்தவுடன் பல் தேய்த்து குளித்துவிட்டு இந்த பாடலை போட்டுவிட்டு அன்றாட வேலையை செய்யுங்கள். அது பாட்டுக்கு ஒலிக்கட்டும். நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பீர்கள். உங்களுடைய மன அழுத்தத்தை அந்த மந்திர வார்த்தைகள் நிச்சயம் நீக்கும். சரி இந்த பாடலை இன்றைக்கு படிக்க வேண்டியது அவசியம் என்ன. இன்று பவுர்ணமி.

சந்திரனினுடைய கிரகம் கெட்டுப் போவதால் தான் நம்முடைய மனம் குழம்பி போகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது. இன்று இந்த பாடலை 6:30 மணிக்கு ஒரு முறை கேட்டுவிட்டு, சிறிது நேரம் குலதெய்வத்தையும் முருகனையும் நினைத்து அந்த சந்திர பகவானை தரிசனம் செய்து, சந்திர நில ஒளியில் அமருங்கள். நிச்சயம் உங்களுடைய மன அழுத்தமானது குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த திருமுருகாற்றுப் படையை முழுசாக படிக்க முடியாது அதில் இருக்கும். ஒரே ஒரு நான்கு வரியை நம்மால் படிக்க முடியும். இது நாம எல்லாருக்கும் தெரிந்த வரிகள் தான். அந்த வரிகளை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள போகின்றோம். இந்த வரிகளை படிப்பதன் மூலமாகவும் உங்களுக்கு திருமுருகாற்றுப்படையை முழுமையாக படித்த பலன் கிடைக்கும்.

முருகன் பாடல்

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.

இதையும் படிக்கலாமே: 11-6-2025 குழந்தைகள் நன்றாக படிக்க தானம்

இவ்வளவுதாங்க. மன அழுத்தம் என்பது நாம் நினைப்பது போல சின்ன விஷயம் கிடையாது. நம்முடைய ஆரோக்கியத்தையே நிலை குளிக்க கூடியது. ஆகவே எளிதில் நாம் அதற்குள் சென்று விடக்கூடாது. மன அழுத்தத்தில் இருப்பவர்கள் சீக்கிரமாக அதிலிருந்து வெளிவர வேண்டும். வேறு வழி கிடையாது இருக்கும் கஷ்டம் என்னை மன அழுத்தத்தில் ஆழ்த்தி வைத்துள்ளது என்றால், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக. அரோகரா அரோகரா சொல்லிக்கொண்டே இருங்கள். மன அழுத்தம் இருந்த இடம் காணாமல் போகும் என்ற தகவலுடன் முருகன் பாதத்தை பணிந்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்