திருப்பதி பெருமாளை நினைத்து ஒரு நிமிடம், அந்த ஹனுமனை உங்கள் முன்னே நிறுத்தி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ! கோஷத்தை எழுப்பி பாருங்கள். உங்கள் உடம்பை பிடித்த அத்தனை கெட்டதும் உடனடியாக விலகும். மனக்குழப்பம் தீரும். மன சஞ்சலங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
பைத்தியம் பிடித்தது போல திரிந்து கொண்டிருப்பவர்கள் கூட சாதாரண சூழ்நிலைக்கு உடனடியாக மாறுவீர்கள். இது நிதர்சனமான உண்மை. இதோடு சேர்த்து உங்களுடைய பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு தரக்கூடிய ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தையும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சில பேருக்கு ஜாதக கட்டத்தில் சனி பகவானும் சந்திர பகவானும் சேர்ந்திருப்பார்கள். இப்படி இருந்தால் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். கெட்ட கெட்ட எண்ணம் வரும். மன குழப்பத்தில் வாழ்க்கையே சூனியமாக மாறிவிடும். உங்களுக்கும் இதுபோல பிரச்சனை இருக்கா. உங்கள் வாழ்வில் சனி பகவானின் தாக்கம் அதிகமாக இருக்கிறதா? புரட்டாசி மாதத்தில் வரும் ஒரு சனிக்கிழமை திருப்பதிக்கு போய் பெருமாளை தரிசனம் செய்யுங்க பிரச்சனைக்கு உடனடியாக விடிவுகாலம் பிறக்கும்.
புரட்டாசி சனி பெருமாள் வழிபாடு
சரி, அடுத்த வருஷம் புரட்டாசி மாதம் முன்னாடியே டிக்கெட் புக் பண்ணிட்டு போய், பெருமாளை சுலபமாக பார்த்து விட்டு வரலாம். அப்படியா? நிச்சயம் கிடையாது. திருப்பதி பெருமாளை கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு பாதயாத்திரை ஆக நடந்து சென்று தரிசனம் செய்ய வேண்டும். டிக்கெட் புக் பண்ண கூடாது.
தர்ம தரிசனத்தில் போய் வரிசையில் நின்று சிரமப்பட்டு அந்த பெருமாளை பார்த்துவிட்டு வீடு திரும்பி பாருங்கள். உங்களுடைய துன்பங்கள் எல்லாம் அந்த திருப்பதி ஏழுமலையிலேயே கழிந்து விடும். ஆமாங்க இது ஒரு கஷ்டமான பரிகாரம் தான். ஆனால் உங்களுடைய கர்ம வினை அனைத்தும் அங்கேயே கழிந்து போகும்.
பெருமாளே நீயே கதி என்று எவர் ஒருவர் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் விடிவு காலம் பிறக்கும். அதற்காக கைக்குழந்தையை வைத்துக்கொண்டு, முதியோர்களை கூட்டிக் கொண்டு எல்லாம் இந்த பரிகாரத்தை செய்து ரிஸ்க் எடுக்கக் கூடாது. உங்களுடைய உடம்பில் தெம்பு இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: பணவசிய தாந்த்ரீக பஞ்சமி பரிகாரம்
உங்களால் இந்த பரிகாரத்தை சிரமப்பட்டு செய்ய முடியும் என்பவர்கள் இளைஞர்கள் கட்டாயமாக செய்யலாம். உங்கள் வாழ்க்கை எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை அடையும். நீங்கள் அறிந்து அறியாமல் உள்ள செய்த பாவத்திற்கு உண்டான மன்னிப்பும் கிடைக்கும். கர்ம கழியும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவிலும் நிறைவு செய்து கொள்வோம்.