மன குறை தீர, அறிவு மேம்பட கூற வேண்டிய மந்திரம்

Budhan-Manthiram

மனிதர்களாகிய நம்மை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது நம்மிடம் மனிதர்களுக்கேயுரிய மனமும் அறிவாற்றலும் தான். ஆனால் இன்று பெரும்பாலான மக்களுக்கு ஆரோக்கியமான மனமும், சிந்திக்கக்கூடிய திறனும் இருந்தாலும் எல்லோராலும் அதை சரியாக பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள இயலாமல் இருக்கக் காரணம், அவர்களின் மனத்திலும், சிந்தனையிலும் இருக்கும் தெளிவின்மை மற்றும் மந்த நிலையே ஆகும். அப்படிப்பட்டவர்கள் சந்திரன் மற்றும் புதன் பகவானை இம் மந்திரம் கூறி வழிபட்டு பலனடையலாம்.

chandra bagavan

மந்திரம் :
மஹாபுத்திர் மஹாவீர்யோ
மஹாஸக்திர் மஹாத்யுதி

இம்மந்திரத்தை சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமைகளிலும் புதன் பகவானுக்குரிய புதன் கிழமைகளிலும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீட்டிலேயே வழிபடுவதாக இருந்தால் 108 முறை இம்மந்திரத்தை கூறி வழிபடலாம். இத்தினங்களில் கோவிலுக்கு காலையில் சென்று அந்த சந்திரன் மற்றும் புதன் பகவான் விக்கிரகங்களுக்கு நெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் உங்கள் மனம் மற்றும் அறிவாற்றல் மேலும் சிறப்பாகும். சிறந்த சிந்தனை சக்தியும் தெளிந்த மனோநிலையும் உருவாகும். மனதிலும், சிந்தனையிலும் இருந்த மந்த நிலை நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
ராகு, கேது, சனி கிரக தோஷங்கள் நீக்க கூறவேண்டிய மந்திரம்

ஒரு மனிதன் மனிதனாக அறியப்படுவதற்கு மூல காரணமே அந்த மனிதனுக்கென்று இருக்கும் மனம் மற்றும் அறிவாற்றல் திறனால் தான். ஒரு மனிதன் எவ்விடயங்களிலும் சிறக்க இந்த இரண்டும் அவனுக்கு நல்ல நிலையில் இருப்பது அவசியம். ஆனால் ஒரு சிலருக்கு இந்த மனம் மற்றும் சிந்திக்கும் திறனில் சில குறைபாடுகள் ஏற்படுகிறது. ஜோதிடத்தில் ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாக சந்திர பகவான் கூறப்படுகிறார். அதுபோல அந்த மனிதனின் சிந்தனை மற்றும் அறிவாற்றலுக்கு காரகனாக புதன் பகவான் கருதப்படுகிறார்.

இந்த இருகிரகங்களின் சாதகமற்ற அமைப்பினால் ஒரு மனிதனின் மனம் மற்றும் சிந்தனை திறனில் குறைபாடு ஏற்படும் என்று அக்காலத்திலேயே வானியல் சாத்திரத்தை நன்கு ஆராய்ந்த சித்தர்கள் மற்றும் முனிவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த கிரகங்களின் தீய தாக்கம் மனிதர்களைப் பற்றாமல் இருக்க, அவர்கள் இயற்றிய இம்மந்திரத்தை ஜெபிக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் சக்திவாய்ந்த ஒலிஅதிர்வுகள் அத்தீய வினைகளை நீக்கி ஒரு மனிதனின் மனம் மற்றும் சிந்தனையை மேம்படுத்தும்.

English Overview:
Here we have a mantra for Lord Chandra and Lord Budhan in Tamil. By chanting this mantra one can get clear ideas and good skills.