படுக்கை அறையை இப்படி வைத்திருந்தால் மனநிம்மதி இல்லாமல் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் தான் வந்து கொண்டிருக்கும்

couple-fight-bedroom
- Advertisement -

வீட்டிற்குள் நுழைந்த உடன் நிம்மதி இருக்க வேண்டும், மனது சாந்தம் அடைய வேண்டும். காலையில் வீட்டை விட்டு வெளியே சென்று பல பிரச்சனைகளை சமாளித்து வேலை பார்த்து வருபவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாக சற்று நேரம் படுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி தான் நினைத்ததை நடத்திக் கொள்ளும் வகையில் வீட்டின் சூழ்நிலை சரியாக அமைந்திருக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களின் மனதை புரிந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். இப்படி அனைத்துக் கவலைகளையும் மறந்து நிம்மதியாக இருப்பதென்பது. உறங்கும் பொழுது தான். எனவே இந்த படுக்கை அறையை இப்படி வைத்திருந்தால் மட்டுமே மன நிம்மதி கிடைக்கும். அப்படி படுக்கை அறையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

job

வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரும் வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை பளு காரணமாகவும், தனக்கு மேலுள்ள அதிகாரிகளின் உந்துதல் காரணமாகவும் பல வகையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வருமானம் வேண்டி பலவித இன்னல்களுக்கு நடுவில் தான் வேலை பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் காலையில் எழுந்தது முதல் இரவு வரை செல்கின்ற இடங்களிலெல்லாம் ஏற்படும் இன்னல்களை கடந்து தான் வருகின்றோம். நமது குடும்ப சூழ்நிலை காரணமாக பல வித பிரச்சினைகளினால் உண்டாகும் தாக்கத்தினாலும் மனிதன் மன உளைச்சலுக்கு ஆளாகின்றான். ஆனால் இவை அனைத்தையும் சாமாளித்து வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் அனைத்தையும் மறந்து நிம்மதியாக தூங்கும் இடம் என்பது படுக்கை அறை மட்டுமே.

fight4

எனவே படுக்கை அறை என்பது மனதிற்கு சாந்தம் கொடுக்கின்ற வகையில் சத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மனதிற்கு சஞ்சலம் இல்லாமல் இருக்க படுக்கையறையை எப்போதும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு சில வீடுகளில் அவர்களது வீட்டின் பாதி பொருட்கள் படுக்கையின் மீது தான் இருக்கும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஈர துணிகளை காய வைப்பதற்கு படுக்கை அறையையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஒரு வீட்டில் ஈர துணிகளில் இருந்து வரும் ஈர வாசனை அதிர்ஷ்டத்தை குறைக்கிறது. இப்படி மனதிற்கு நிம்மதி கொடுக்கும் இடத்தில் இவ்வாறான எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகின்ற விஷயங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

dress-on-bed

இவ்வாறு வீட்டின் படுக்கை அறையை இதுபோன்று வைத்திருந்தால் அங்கு நிம்மதியாக உறங்க வருபவர்கள் எண்ணத்தில் பல தடுமாற்றங்கள் ஏற்படும். ஏற்கனவே அவர்களின் மனதில் பலவித குழப்பங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இவை அனைத்தும் அதிகமாகி குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட இதுவே காரணமாக அமைந்து விடும். இதனால் இவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படும். எனவே படுக்கை அறை தூய்மையாக இருந்தால் மன நிம்மதி ஏற்பட்டு கணவன் மனைவி இடையே சுமுகமான பேச்சு வார்த்தைகள் உண்டாகும். எனவே குடும்பம் சிறப்புடன் இருக்கவும், உடல் ஆரோக்கியம் பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கும் படுக்கை அறையை எப்பொழுதும் அமைதியாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -