மன நிம்மதி பெற பைரவர் வழிபாடு

bhairavar praying
- Advertisement -

என்னதான் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து கோடி கோடியாக சேர்த்து வைத்தாலும் பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும் என்று நினைத்தாலும் பணத்தால் வாங்க முடியாத ஒன்றாக திகழ்வதுதான் நிம்மதி. இந்த நிம்மதியை நம்மால் எங்கு தேடினாலும் வாங்க முடியாது. எவ்வளவு செலவு செய்தாலும் வாங்க முடியாது. அப்படிப்பட்ட நிம்மதியை பெற வேண்டும் என்றால் பைரவரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் பணம், நகை, சொத்து,சுகம் என்று எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிம்மதி என்ற ஒன்று கண்டிப்பான முறையில் வேண்டும். கோடி கோடியாக பணத்தை சேர்த்து வைத்து நிம்மதி இல்லை என்றால் அவர் வாழ்வதற்கு எந்த வித அர்த்தம் இல்லாமல் போய்விடும். கிட்டத்தட்ட அவர் ஒரு இயந்திரம் போல செயல்படுகிறார் என்று அர்த்தம்.

- Advertisement -

வெளியில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டிற்குள் வந்தவுடன் மனைவி, மக்களை பார்த்தவுடன் ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் செலவு செய்யும் பொழுது மனதில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் மறைந்துவிடும். இப்படிப்பட்ட ஒரு குடும்பம் அமைவது என்பது மிகப்பெரிய வரம் ஆகும். நம்முடைய வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நமக்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் கால பைரவர்.

பொதுவாக காலபைரவரை அஷ்டமி தினங்களில் வழிபடுவது சிறப்பு என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட காலபைரவரை புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். இந்த வழிபாட்டை பைரவரின் படம் இருந்தால் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பைரவரின் ஆலயத்திற்கு சென்று செய்ய வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. அவரின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் கடுகு எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது மேற்கு திசை பார்த்தவாறு எரிய வேண்டும்.

- Advertisement -

இதே போல் தான் கோவிலிலும் நாம் ஏற்ற வேண்டும். இந்த முறையில் வாரத்தில் இரண்டு நாட்களும் நாம் கால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினை படிப்படியாக நீங்கி நிம்மதியான வாழ்க்கையை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: புதனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை நாம் நம்பிக்கையுடன் கால பைரவருக்கு செய்வதோடு மட்டுமல்லாமல் நம் மனதில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் அவரிடம் சமர்ப்பித்து விட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் அவரின் அருளால் அந்த பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை நம்மால் பெற முடியும்.

- Advertisement -