மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று ஒரு பாடல் இருக்கிறது. மனைவி மட்டுமல்ல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான். இந்த ஜோதிடம் குறித்த பதிவில் எந்த ராசிக்காரர்களை கணவனாக வாய்க்கப் பெற்ற மனைவிமார்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் பார்க்கப் போகிறோம்.
வாழ்க்கை என்ற பயணம் தொடர்வதற்கு கணவன் மனைவி என்ற இருவரும் கண்டிப்பான முறையில் தேவை. கணவன் மனைவியாக வாழ்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்போடும் அனுசரணையோடும் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி இனிமையான வாழ்க்கையை வாழ்பவர்களை விரலை விட்டு கூட என்ன முடியாத அளவிற்கு போய்விட்டார்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் சண்டை போட்டு பிரிபவர்களே இன்று அதிகமாக இருக்கிறார்கள்.
சரி இப்பொழுது பதிவிற்கு வருவோம் எந்த ராசிக்காரர்களை திருமணம் செய்து கொண்டால் மனைவிமார்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பார்ப்போம். பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் ஆண் ராசி பெண் ராசி என்று இருக்கிறது. இதில் பெண் ராசியில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் பெண் ராசியாக கருதப்படுவதால் பெண்களுக்குரிய அமைதியும் பக்குவமும் அவர்களிடம் அதிகமாகவே இருக்கும். அதனால் மனைவிமார்கள் தவறுகள் செய்தாலும் கோபப்பட்டாலும் சண்டையிட்டாலும் அவர்களை அனுசரித்து அமைதியாக சென்று விடுவார்கள்.
கடகம்: இது நீர் ராசியாக கருதப்படுகிறது. நீர் எப்படி மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கி செல்லும் அதாவது இறங்கி செல்லுமோ அந்த அளவிற்கு கடக ராசிக்காரர்கள் தங்கள் மனைவியிடம் விட்டுக் கொடுத்து இறங்கி செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதேசமயம் எந்த காரணத்தைக் கொண்டும் தங்கள் மனைவியை பிறரிடம் விட்டுக் கொடுத்து பேசவே மாட்டார்கள்.
கன்னி: இந்த ராசிக்காரர்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ராசிக்காரர்கள். மனைவியால் பிரச்சனை ஏற்படும் பொழுது கோபப்படாமல் அமைதியாக பொறுமையுடன் இருப்பார்கள். கோபப்பட்டு பிரிந்து செல்வோம் என்ற வார்த்தையை அவர்கள் வாயிலிருந்து வரவே வராது.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு காலமானாலும் தங்கள் மனைவிக்காக பொறுமையுடன் காத்திருக்கும் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது மனைவியால் எவ்வளவு பிரச்சனை ஏற்பட்டாலும் அதை வெளியில் சொல்லாமல் தன் மனைவி திருந்தி தன்னுடன் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் வருட கணக்கிலும் காத்துக்கொண்டு இருக்கும் பொறுமை மிகுந்தவர்களாக விருச்சிக ராசிக்காரர்கள் திகழ்கிறார்கள்.
மகரம்: இந்த ராசிக்காரர்கள் அதிகமாக தொழில் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதால் குடும்பத்தில் மனைவியிடம் விட்டுக் கொடுத்து சென்று விடுவார்கள். இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்யும் மனைவிமார்கள் குடும்பம் நடத்தும் விதத்தில் கணவன் எந்தவித கேள்வியும் கேட்காமல் இருப்பார்கள். மனைவிக்கு அடங்கிப் போகக்கூடிய ராசியாகவும் இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் விட்டுக் கொடுத்தும் பொறுமையுடனும் செல்வார்கள்.
இதையும் படிக்கலாமே: ஜாதகத்தில் உள்ள சனி தோஷம் நீங்க பரிகாரம்.
மீனம்: இந்த ராசிக்காரர்கள் கடல் ராசியாக கருதப்படுகிறார்கள் அது மட்டுமல்லாமல் மீன ராசி என்றாலே மீனைப் போல் வளைந்து நெளிந்து கொடுக்கக்கூடிய தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அனைத்து பொறுப்புகளையும் தாங்களே சுமந்து கொண்டு உடன் இருப்பவர்களுக்கு எந்தவித கஷ்டங்களையும் தரக்கூடாது என்று நினைக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் என்பதால் இவர்களை திருமணம் செய்யும் மனைவிமார்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்களாக இருப்பார்கள்.