எந்த 5 விஷயங்களை செய்யும் பொழுது கணவனுக்கு அவள் உண்மையான மனைவி ஆகிறாள்? கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

marraige-vilakku

கணவனுக்கு மனைவியானவள் எப்படி இருக்க வேண்டும்? என்று ஒரு வடமொழி ஸ்லோகம் எடுத்துரைக்கிறது. இந்த ஸ்லோகத்தின் வாயிலாக ஒரு மனைவி கணவனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? என்பதை தெரிவித்து இருக்கிறார்கள். இந்து மத சாஸ்திரப்படி எந்த ஒரு இடத்திலும் மனைவியானவள் கணவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை ஆனால் இந்த ஸ்லோகத்தின் பொருளை தவறாக உணர்ந்து கொண்டால் அப்படி தான் தோன்றிவிடும். அது என்ன ஸ்லோகம்? என்பதை இனி இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

marraige-couple

ஸ்லோகம்:
கார்யேஷு தாசி; கரணேஷு மந்திரி
ரூபேஷு லட்சுமி; க்ஷமயா தரித்ரீ
ச்நேஹ ச மாதா; சயனே து வேச்யா
ஷட் கர்ம யுக்தோ; குல தர்ம பத்தினி

மேற்கூறிய இந்த ஸ்லோகத்தில் இருக்கும் முதல் வரி மனைவியானவள் தாசியை போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கு இந்த வார்த்தையானது தவறாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள் தவறானவை அல்ல. கணவனுடைய முழுமையான அன்பைப் பெற எந்த ஒரு பெண்ணும் முழு ஈடுபாட்டுடன் அவனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறார்கள். அப்போது தான் அவன் மனைவியே உலகம் என்று அவளையே சுற்றி வருவான். அவளின் சொல்லே வேதவாக்காக எண்ணி செயல்படுவான்.

marraige

இரண்டாவது வரியில் ஆலோசனை சொல்வதில் மந்திரியை போல இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஆணைவிட பெண்ணுக்கு அதிக பொறுப்புணர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. கணவனுக்கு ஒரு மந்திரியாக இருந்து அவன் நன்மை தீமைகளை உணர்ந்து எடுத்துக் கூறுவபவளே உண்மையான மனைவியாக இருக்க முடியும் என்கிறார்கள்.

- Advertisement -

மூன்றாம் வரியில் லட்சணத்தில் லட்சுமியை போல இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கணவன் மட்டுமே தான் மனைவியை பார்க்க வேண்டும் மற்ற ஆடவர்கள் கண்களுக்கு மாற்றான் மனைவி தாயாக தெரிய வேண்டுமென்றால் மனைவியானவள் மகாலட்சுமியை போல அலங்காரம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். தலையில் நேர் வகிடு எடுத்து, பூச்சூடி, நெற்றியில் திலகமிட்டு, கை நிறைய வளையல் இட்டு, உடல் அங்கங்கள் தெரியாதபடி உடை உடுத்திக் கொண்டு, சாக்ஷாத் மஹாலட்சுமியின் ஸ்வரூபமாக காட்சி அளித்தால் எந்த ஒரு ஆடவனும் அவளை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான். அப்படியே பார்த்தாலும் அவன் கண்களுக்கு அவள் தாயாகவும், தமக்கையாகவும் தான் தெரிவாள்.

ego-couple

நான்காம் வரியில் பொறுமையில் பூமா தேவியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கணவன் எவ்வளவு தான் கோபப்பட்டாலும் மனைவியானவள் பொறுமையை கடைபிடித்து அந்த கோபத்தை அடக்கும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி, வீட்டை இரண்டாக்கி விடக்கூடாது என்கிறார்கள். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற கூற்றின் படி இங்கு மனைவி பொறுமை காத்தால் குடும்பத்தையும் ஆளலாம்.

couples

ஐந்தாம் வரியில் ஈன்றெடுத்த பிள்ளைக்கு தாய் சோறு ஊட்டுவது போல கட்டிய கணவனையும் அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும். கணவனையும், பிள்ளைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். தாயாகவும், நல்ல தோழியாகவும் இருந்து அவனை அரவணைக்க வேண்டும். கணவருடைய குணங்கள் அறிந்து மனைவியானவள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து நடந்து கொண்டால் அவளே உண்மையான குல தர்ம பத்தினி என்கிறது இந்த ஸ்லோகம். அதற்காக மனைவியானவள் கணவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று கூற வரவில்லை. நீங்கள் கணவன் மீது காட்டும் அன்பு உங்களுடைய எல்லா பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். மேலோட்டமாக இவற்றைச் சிந்தித்து பார்ப்பதை விடுத்து சற்று ஆழமாக யோசித்தால் இதிலிருக்கும் உள்ளர்த்தம் பெண்களுக்கும் புரியும்.