மனைவியின் பேச்சை கேட்டு நடக்கும் 5 ஆண் ராசிகள் யாரெல்லாம்? கேட்காதவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

husband-wife-astro
- Advertisement -

எல்லாக் குடும்பத்திலும் மனைவி கணவன் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவர் மனது கோணாமல் இன்னொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது தான் குடும்பம். இதில் சுயநலத்திற்கு துளி கூட இடமில்லை. ஆணில் பாதி பெண்ணும், பெண்ணில் பாதி ஆணும் இருப்பதே கணவன், மனைவிக்கான அர்த்தமாகிறது. இப்படி இருக்க மனைவியின் சொல்லே தாரக மந்திரமாக கேட்டு நடக்கும் ஐந்து ஆண் ராசிகள் யாரெல்லாம்? மனைவியின் பேச்சை கேட்காதவர்கள் யார் எல்லாம்? என்கிற சுவாரசிய தகவல்களை பொது பலனாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பதை விரும்புபவர்கள். ஆனால் அவர்கள் சொல்லும் எல்லா விஷயத்திற்கும் தலையாட்டுவது இல்லை. நியாயத்தின்பால் நிற்கும் மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் மனைவியின் பிரியமுள்ள கணவராக நடந்து கொள்வதை விரும்புகிறார்கள். பெற்ற தாய்க்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கிறார்களோ, அதே அளவிற்கு கட்டிய மனைவியையும் மரியாதையுடன் நடத்துவார்கள். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்ளும் ராசியில் மேஷ ராசி முதலிடம் வகித்துள்ளது.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்த ஆண்கள் எப்பொழுதும் மனைவியின் பேச்சை கேட்டு நடந்து கொள்வார்கள். அவருடைய கருத்துக்கு செவி சாய்த்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்து தரக்கூடிய நல்ல ராசிக்காரர்கள். மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள். அவ்வப்போது மனைவியை குட்டி குட்டியாக ஏமாற்றவும் செய்வார்கள். மனைவியின் அன்பை பெறுவது சில சமயங்களில் கடினமாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டே இருக்கக் கூடியவர்கள் இந்த கடக ராசிக்காரர்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் எப்பொழுதும் மனைவிக்கு மரியாதை கொடுப்பதில் முதலிடம் வகிக்கிறார்கள். தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்ளும் துலாம் ராசிக்காரர்கள் என்றும் அநியாயத்திற்கு துணை போகாதவர்கள். எனவே நியாயமாக நடந்து கொள்ளும் மனைவிமார்களுக்கு துலாம் ராசிக்கார கணவன்கள் நிச்சயம் ஒரு வரமே என்று கூறலாம். கணவனுக்கு மனைவி அடங்கிப் போக வேண்டும் என்று எப்பொழுதும் இவர்கள் நினைப்பது இல்லை. அவர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர்கள் இவர்கள்.

- Advertisement -

மகரம்:
மகர ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களுக்கு எப்பொழுதும் சமத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். ஆண் பெண் இருவரும் சமம் என்பதை எல்லா ஆண்களும் உணர்வதில்லை. ஆனால் இந்த மகர ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் ஆண் பெண் சமத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே தன்னுடைய மனைவிக்கும் சம உரிமை கொடுத்து அவர்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். எல்லா சமயங்களிலும் மனைவியுடைய அன்புக்கு பாத்திரமாக விளங்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருக்கும் இவர்களை மனைவிமார்கள் புரிந்து கொண்டால் வாழ்வு இனிமையானதாக மாறும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்த ஆண்கள் தங்களுடைய மனைவி சொல்லுக்கு எப்பொழுதும் மறுபேச்சு பேசுவதில்லை. அதில் நியாயம் இருந்தால் நிச்சயம் அதனை ஏற்றுக் கொண்டு உடனே செயல்படுத்துவார்கள். எந்த ஒரு விஷயத்திலும் தனியாக இவர்கள் முடிவு எடுக்க மாட்டார்கள். தன் மனைவியையும் கலந்து ஆலோசித்து அதன் பின் தான் முடிவை எடுப்பார்கள். சிறுசிறு விஷயங்களுக்கு கூட மனைவியின் பங்களிப்பை எதிர்பார்ப்பார்கள். எப்பொழுதும் மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்கும் ராசிக்காரர்களில் மீன ராசி முதலிடம் வகிக்கிறது.

மற்ற ராசிக்காரர்கள் தங்கள் மனைவிக்கு மரியாதை கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனைவியின் அன்பை பெற்று விட்டால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்பதை உணர வேண்டும். குறிப்பாக மிதுனம், சிம்மம், விருச்சிகம் தனுசு போன்ற ராசிக்காரர்கள் தேள் போல் கொட்டிக் கொண்டே இல்லாமல் மனைவிக்கும் ஒரு மனம் உண்டு என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் நல்லது. குறிப்பு: இது ஒரு பொது பலனே ஆகும்.

- Advertisement -