மூலிகை மூலம் மணலை கயிறாக திரித்து காட்டிய சித்தர் வீடியோ.

Neermulli mooligai special

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது நவீன அறிவியலாளர்களின் கூற்று. அப்படி குரங்கிலிருந்து இன்றைய நாகரீக மனிதனாக உருவாகும் காலம் வரை அவன் உடல் நலம் குன்றிய காலத்தில் பல வகையான மூலிகைகளை உண்டு, அதன் மருத்துவ குணங்களை அறிந்து அதை மூலிகை வைத்திய கலையாக வளர்த்தான். பின்பு மனிதன் ஆன்மீகத்தில் உச்சமடைந்து சித்தராக மாறிய போது இந்த மூலிகை வைத்தியம், “சித்த மருத்துவ” கலையாக மாறியது. இப்போது இந்த மருத்துவ மூலிகைகளுக்கு வேறு சில அற்புத சக்திகளும் இருப்பதை கண்டனர் சித்தர்கள். அந்த வகையில் ஒரு மூலிகையை கொண்டு மணலை கயிறாக திரித்து காட்டுகிறார் ஒரு சித்தர். இதோ அதன் வீடியோ.

நீர்முள்ளி மூலிகை பயன்

நம் நாட்டு சித்தர்கள் தங்களின் தவ யோகத்தாலும், ஆராய்ச்சி திறனாலும் நம் நாட்டில் விளையும் மூலிகைகள் பலவற்றிற்கு நோய்களை தீர்க்க கூடிய மருத்துவ ஆற்றல்களும் வேறு பல சக்திகளும் இருப்பதை கண்டனர். அப்படி ஒரு அற்புதமான ஆற்றல் வாய்ந்த ஒரு மூலிகை தான் “நீர் முள்ளி” மூலிகை. இது ஒரு அறிய வகை மூலிகை ஆகும். பல மருத்துவ குணங்களை கொண்ட இந்த மூலிகை, ஒரு சிறந்த ஆண்மை பெருக்கி ஆகும். உடலில் நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைவால் பாதிக்கபட்டிருக்கும் நபர்கள் இந்த நீர் முள்ளியுடன் அமுக்கிராங் கிழங்கு மற்றும் பிற மூலிகைகளுடன் சரியான பக்குவத்தில் உண்டால் ஆண்மை குறைவு, மலட்டு தன்மை நீங்கும். இந்த நீர்முள்ளி மூலிகைக்கு மற்றொரு அற்புதத்தை நிகழ்த்தும் ஆற்றல் உண்டு. அது தான் “மணலை கயிறாக திரிப்பது”. இதை இக்காணொளியில் விளக்குகிறார் மூலிகைகளின் பயன்கள் மற்றும் சக்திகளை பற்றி நன்கு அறிந்த சித்தர் ஒருவர்.

ஒரு உரல் போன்ற பொருளுளில் சிறிது மணலை எடுத்து போட்டுக்கொள்கிறார் அந்த சித்தர். பிறகு நீர் முள்ளிச் செடியின் விதைகளை அந்த மணலில் இட்டுக்கொள்கிறார். அதன் பின்பு செம்பு பாத்திரத்தில் இருக்கும் நீரின் சில துளிகளை அந்த மணல் மற்றும் மூலிகையின் கலவையில் இட்டு, பிசைய ஆரம்பிக்கிறார். இப்போது அந்த மணல் மற்றும் மூலிகை கலவை இறுக தொடங்குவதை பார்க்க முடிகிறது. பிறகு மேலும் நீர் துளிகளை விட்டு பிசையும் போது அந்த மணல் ஒரு மணல் கயிறாக மாறியிருப்பதை காணலாம். இது போன்ற இன்னும் எண்ணற்ற அற்புத ஆற்றல்கள் கொண்ட தெய்வ மூலிகைகள் நமது நாட்டின் காடுகளில் மறைந்து இருக்கின்றன.

இது போன்ற எமேலும் பல வீடியோ பதிவுகள், ஆன்மீக தகவல்கள் போன்றவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we described about the benefits of Neermulli mooligai. Wirth the help of Neermulli mooligai one can event convert sand to thread.