மணக்க மணக்க மணத்தக்காளி கீரையை வைத்து சூப்பரான ஒரு சட்னி கூட அரைக்கலாமே. அது எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வம் இருக்கா?

manathakkali-thuvaiyal
- Advertisement -

மணத்தக்காளி கீரை. இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாய்ப்புண், வயிற்று வலி, வயிறு புண் உள்ளவர்கள் இந்த மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடனே சரி ஆகும். மணத்தக்காளி கீரையை சில பேர் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். சில பேர் பருப்பு போட்டு கடைந்தும் சாப்பிடுவார்கள். ஆனால், மணத்தக்காளி கீரையில் சட்னி கூட மிக மிக சுவையாக மணக்க மணக்க அறைக்கலாம். அது எப்படி என்பதை பற்றிய ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் 1 ஸ்பூன் அளவு எண்ணெயை கடாயில் ஊற்றி சூடு செய்யவும். பிறகு உளுந்து 1 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து வர மல்லி 1 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், மிளகு 1/2 ஸ்பூன், போட்டு அதையும் மணக்க மணக்க வருத்துவிட்டு, தோல் உரித்த சின்ன வெங்காயம் 10 பல், தோல் உரித்த பூண்டு 10 பல், வர மிளகாய் 6, போட்டு இந்த பொருட்களையும் பொன்னிறமாக வறுக்கவும்.

- Advertisement -

இறுதியாக இரண்டு கைப்பிடி அளவு கழுவி சுத்தம் செய்யாத மனத்தக்காளி கீரையை இதில் போட்டு, இரண்டு வதக்க வதக்கினால் உடனே கீரை சுருங்கி வெந்து வந்துவிடும். மணத்தக்காளி கீரையை ரொம்ப நேரம் எண்ணெயில் வதக்கினால், கொஞ்சம் கசப்பு தெரியும். அதனால் ஜாக்கிரதையாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இறுதியில் இதில் சின்ன கோலிக்குண்டு அளவு புளியை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். தேங்காய் துருவல் இரண்டு கைப்பிடி அளவு இதோடு சேர்த்துக் கொள்ளவும். எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

சட்னி நன்றாக அரைபட்டவுடன் இதற்கு தேவையான அளவு உப்பு போட்டு, மீண்டும் ஒரு ஓட்டு லேசாக ஓட்டிக் கொள்ளுங்கள். அப்போது சட்னியின் நிறம் மாறாமல் பச்சை நிறத்தில் அழகாக உங்களுக்கு கிடைக்கும். இதற்கு எப்பவும் போல ஒரு தாளிப்பு கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பொட்டுக்கடலையில் பக்கோடாவா? 1 கப் பொட்டுக்கடலை இருந்தாலே போதுமே! மொறு மொறுன்னு பக்கோடா செஞ்சி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து இதில் கொட்டி கொஞ்சம் கெட்டியாகவே பரிமாறினால், இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலாம். அப்படி இல்லை என்றால் சுட சுட சாதத்தில் போட்டு கூட கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். ரெசிபி பிடிச்சவங்க ஆரோக்கியம் நிறைந்த இந்த குறிப்பை தவறவிடாமல் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -