பொட்டுக்கடலையில் பக்கோடாவா? 1 கப் பொட்டுக்கடலை இருந்தாலே போதுமே! மொறு மொறுன்னு பக்கோடா செஞ்சி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

pottu-kadalai-pakkoda_tamil
- Advertisement -

கடலை மாவு வைத்து செய்யப்படும் வெங்காய பக்கோடா எல்லோருக்கும் பிடிக்கும். அதே போல பொட்டுக் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்யக் கூடிய இந்த பக்கோடா அருமையான சுவையில் மொறு மொறுன்னு டேஸ்டியாக இருக்கும். மாலையில் டீயுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிறும், மணமும் நிறையும். நம் வீட்டிலேயே எளிதாக பொட்டுக் கடலையில் எப்படி பக்கோடா செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலமாக நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – நான்கு, பொட்டுக் கடலை – ஒரு கப், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித் தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், அரிசி மாவு – கால் கப், நறுக்கிய மல்லி தழை மற்றும் கருவேப்பிலை – சிறிதளவு, பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

பொட்டுக் கடலை பக்கோடா செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு பொட்டுக் கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பவுடர் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். நாலு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

நறுக்கிய வெங்காயத்தை கைகளால் நன்கு உதிர்த்து விடுங்கள். அரைத்து வைத்துள்ள பொட்டுக் கடலை மாவை வெங்காயத்தில் சேருங்கள். இதனுடன் கால் கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அரிசி மாவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் மசாலாக்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், பெருங்காயத் தூள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கைகளால் பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதனுடன் நறுக்கிய மல்லி தழை மற்றும் கருவேப்பிலை இலைகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். கடலை மாவிற்கு பதிலாக இது போல பொட்டுக் கடலை மாவு சேர்த்து செய்யும் பொழுது இன்னுமே மொறுமொறுப்பாக நன்றாக பக்கோடா செய்யலாம். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அடி கனமான வாணலி ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். தயாரித்த மாவிலிருந்து சிறு சிறு பகுதிகளாக உதிர்த்து விடுங்கள். எல்லா புறமும் நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து எண்ணெய் பிரிய ஒரு டிஷ்யூ பேப்பரில் வையுங்கள். அவ்வளவுதான், சுட சுட மொறுமொறுப்பான பொட்டுக்கடலை பக்கோடா ஈசியாக இதே முறையில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

இதையும் படிக்கலாமே:
வெங்காயத்தை வைச்சி இப்படி சட்னி அரைச்சீங்கன்னா ஆறு மாசம் ஆனா கூட கெட்டுப் போகாமா சூப்பரா இருக்கும். இட்லி தோசைக்கு மட்டுமில்லைங்க தயிர் சாதத்துக்கு கூட அட்டகாசமா இருக்கும்.

வெளியே மொறுமொறு எனவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கக் கூடிய இந்த பொட்டுக் கடலை வெங்காய பக்கோடா சாதத்துடனும், மாலையில் டீ உடனும் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -