மாந்தி தோஷம் பரிகாரங்கள்

Mandhi dosham pariharam in Tamil
- Advertisement -

மாந்தி தோஷம் குறித்து பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள் இந்த மாந்தி என்பது சனீஸ்வர பகவானின் மைந்தன் எனவும் அவர் ஒருவரின் ஜாதகத்தில் சனீஸ்வர பகவானுடன் தொடர்புடைய ஒரு உப கிரகமாகவும் கருதப்படுகிறார். இந்த மாந்தி தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கின்ற பொழுதே அவர் பல வகையான கஷ்டங்களை அனுபவிப்பார். அத்தகைய நபர்கள் தங்களின் மாந்தியை தோஷம் நீங்க செய்து கொள்ள வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

மாந்தி தோஷம் விலக பரிகாரங்கள்

காஞ்சிபுரம் நகரத்தில் எமதர்ம ராஜனின் சேவகனாகிய சித்திரகுப்தர் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற ஏதேனும் ஒரு தினங்களிலோ அல்லது அமாவாசை தினத்தன்றோ வருகின்ற ராகு கால வேளையில் சென்று, சித்திரகுப்தற்கு 3,7,9 எண்ணிக்கையில் நெய்தீபம் வைத்து தங்களுக்கு ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாந்தி தோஷத்தை போக்கி, வாழ்வில் நற்பலன்களை வழங்க வேண்டும் என மனதார வழிபாடு செய்து வர வேண்டும்.

- Advertisement -

காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வாரந்தோறும் வருகின்ற வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும், மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்தன்று ராகு கால வேளையில் உங்கள் வீட்டு பூஜையறையிலேயே சித்திரகுப்தருக்கு தீபம் ஏற்றி, அவரை மனதார வேண்டி வழிபாடு செய்து வர வேண்டும். இந்த பரிகாரம் மாந்தி தோஷ பாதிப்புகளை குறைத்து நன்மையை உண்டாக்கும்.

பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் மாந்தி கிரகம் எந்த கிரகத்தின் வீட்டில் நிலை கொண்டுள்ளதோ அந்த கிரகத்திற்குரிய பூஜை மற்றும் பரிகாரங்களை செய்வதாலும் மாந்தி கிரக தோஷ பாதிப்புகள் நீங்கி நன்மைகள் ஏற்படும். தங்கள் வீட்டு பூஜை அறையில் சிறிய அளவிலான படிக லிங்கம் ஒன்றை வைத்து, அந்த லிங்கத்திற்கு தினமும் விபூதி கொண்டு அபிஷேகம் செய்து, அந்த விபூதியை மாந்தி தோஷம் உள்ளவர்கள் தங்களின் நெற்றியில் இட்டுக் கொள்வதால் சிறந்த பலன் உண்டு.

- Advertisement -

மாந்தி தோஷம் ஜாதகத்தில் இருக்கின்றவர்கள் தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அதேபோன்று திங்கட்கிழமைகள் தோறும் சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானையும், அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும். கோயில்களுக்கு அபிஷேகத்திற்காக காய்ச்சாத பசும்பால் வழங்குவதும் இந்த மாந்தி தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக உள்ளது.

இதையும் படிக்கலாமே: திருமண தாமத பரிகாரங்கள்

மாதந்தோறும் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் வீட்டிலேயே பூஜையறையில் அமர்ந்து குலதெய்வத்தை மனதார தியானித்து, தங்களின் மாந்தி தோஷம் நீங்க வேண்டும் என தினமும் வழிபாடு செய்ய வேண்டும். தங்களின் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்து வருபவர்களுக்கு ஜாதகத்தில் மாந்தி தோஷம் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது.

- Advertisement -