திருமண தள்ளிபோய்க்கொண்டே இருப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள்

Pariharam for marriage delay in Tamil
- Advertisement -

முன்பெல்லாம் சரியான காலகட்டத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்துவிடும். ஆனால் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் ஆண் மற்றும் பெண் ஆகிய பாலருக்கும் திருமணம் தாமதமாகி கொண்டே செல்கிற நிலையை காண முடிகின்றது. இப்படி திருமண தாமதத்தால் தவிப்பவர்கள் தங்களின் இந்த குறையை தீர்க்க ஆன்மீக ரீதியிலான திருமண தாமத பரிகாரங்கள் செய்து பலன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அந்த பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

திருமண தாமத பரிகாரங்கள்

உரிய காலத்தில் திருமணம் நடைபெறாமல் மன வருத்தம் அடைகின்ற ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் தங்கள் வீடுகளில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று வேதியரை கொண்டு சத்தியநாராயண பூஜை செய்து வழிபாடு செய்வதால் திருமண தாமத தடைகள் விலகி விரைவில் திருமணம் நடைபெறும். சத்யநாராயண பூஜை செய்ய முடியாதவர்கள், சத்தியநாராயணர் படத்தை பூஜை அறையில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் மேற்கொண்டு சத்திய நாராயணர் ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபாடு செய்வதாலும் விரைவிலேயே திருமண பாக்கியம் அமையும்.

- Advertisement -

நாம் வேண்டிய அனைத்தையும் வழங்கும் தெய்வமாக மகாலட்சுமி தாயார் விளக்குகிறார். வெள்ளிக்கிழமை தினங்களில் வீடுகளிலும் கோயில்களிலும் மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் திருமண தாமத நிலை ஏற்பட்டவர்களுக்கு அத்தடைகள் நீங்கி சீக்கிரத்திலேயே நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும்.

நல்ல வாழ்க்கைத் துணை அமைவதற்கும், செல்வ வளங்கள் பெருகுவதற்கும் காரகத்துவம் கொண்ட நவக்கிரகமாக சுக்கிர பகவான் திகழ்கிறார். வெள்ளிக்கிழமைகளில் அருகில் இருக்கின்ற சுக்கிர பகவான் சன்னதிக்கு சென்று, வெள்ளை தாமரையை சுக்கிர பகவானுக்கு சமர்ப்பித்து தீபமேற்றி வழிபாடு செய்வதால் தாமதமாக திருமணம் நடக்கும்அமைப்பு நீங்கி, விரைவிலேயே திருமண யோகம் உண்டாகும்.

- Advertisement -

எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தன்று தங்களது வீடுகளில் சுமங்கலி பூஜை செய்து வழிபாடு செய்வதாலும் அந்த வீட்டில் திருமணம் தாமதமாகும் நிலையில் இருக்கின்ற நபர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மேற் சொன்ன சுமங்கலி பூஜை செய்கின்ற வெள்ளிக்கிழமை தினமானது அஷ்டமி, நவமி போன்ற திதிகளாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்வில் திருமண தாமதம் ஏற்படுதல், திருமண தடை உண்டாகுதல் போன்ற இடையூறுகளை சந்திப்பவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி போன்ற நாட்களில் பெருமாள் கோயிலில் கருட பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதால் திருமண தாமதங்கள், தடைகள் போன்றவை நீங்கி சீக்கிரத்திலேயே திருமண வாழ்க்கை கிடைக்க பெறுவார்கள்.

மாதத்தில் வருகின்ற வளர்பிறை அல்லது தேய்பிறை பஞ்சமி திதி தினத்தன்று உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற அம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அக்கோவிலில் இருக்கின்ற பாம்பு புற்றிற்கு, மஞ்சள் குங்குமம் அர்ச்சனை செய்து வாசமிக்க பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்து வருவதால் நிச்சயமான பலன் கிடைக்கும்.

- Advertisement -