- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த மாங்காய் சீசன் முடிவதற்குள் மிஸ் பண்ணாம இந்த பஜ்ஜிய சுட்டு சாப்பிட்டிடுங்க. சுவையில் வாழைக்காய்...

இந்த மாங்காய் சீசன் முடிவதற்குள் மிஸ் பண்ணாம இந்த பஜ்ஜிய சுட்டு சாப்பிட்டிடுங்க. சுவையில் வாழைக்காய் பஜ்ஜி தோற்றுப்போகும்.

- Advertisement -

வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, வெங்காயத்தில் பஜ்ஜி, இப்போது பிரட் பஜ்ஜி கூட போடுகிறார்கள். ஆனால் மாங்காயை வைத்து அசத்தலான சூப்பரான ஒரு பஜ்ஜி ரெசிபி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மாங்காய் பஜ்ஜி யா? என்று யோசிக்காதீர்கள். பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி ஒரே ஒரு முறை இந்த மாங்காய் சீசன் முடிவதற்குள் இந்த பஜ்ஜியை சுவைத்துப் பாருங்கள். பிறகு மீண்டும் மீண்டும் இந்த பஜ்ஜியை செய்து தர சொல்லி வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். அந்த அளவுக்கு இதில் சுவை இருக்கும்.

ஒரு பெரிய ஒட்டு மாங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். ஓரளவுக்கு புளிப்பு கம்மியாக இருக்கக்கூடிய மாங்காயாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாங்காயை தோல் சீவி விட்டு, மாங்காயை ஒரு சீவலில் அகல அகலமாக, வாழைக்காயை பஜ்ஜிக்கு சீவுவது போல நீளநீளமாக கொஞ்சம் மெல்லிசா சீவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – 100 கிராம், உப்பு – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், சமையல் சோடா – 1/4 டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன், தேவைப்பட்டால் 1 சிட்டிகை ஃபுட் கலர், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி இந்த மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே சீவி வைத்திருக்கும் மாங்காய் சீவலிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து இந்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி வாழைக்காய் பஜ்ஜி விடுவது போலவே எண்ணெயில் விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான். சூப்பரான மாங்காய் பஜ்ஜி தயார்.

- Advertisement -

அப்படியே சுட சுட ருசித்துப்பாருங்கள். இதன் சுவைக்கு வாழைக்காய் பஜ்ஜி தோற்றது. சிலபேர் வாழைக்காய் பஜ்ஜி யில் வாய்வு என்று சாப்பிட மாட்டார்கள் அல்லவா. அவர்களுக்கு இப்படி பஜ்ஜி சுட்டு கொடுத்துப் பாருங்கள். பஜ்ஜி சாப்பிட்ட திருப்தி நிச்சயம் கிடைக்கும்.

பின்குறிப்பு: அதிக புளிப்பு உள்ள மாங்காயில் பஜ்ஜி போடக்கூடாது. அதில் சுவை வேறுபடும். அதேபோல பஜ்ஜியை எண்ணெயில் விடும்போது மிதமான தீயில் எண்ணெயை காய்ச்சி பஜ்ஜி போட்டு பொரித்து எடுக்கவேண்டும். உள்ளே இருக்கும் மாங்காய் லேசாக வெந்து வரவேண்டும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா நாளைக்கு உங்க வீட்ல இந்த பஜ்ஜியை போட்டு பாருங்க.

சற்று முன்