குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க பரிகாரம்

karukalaippu pariharam tamil

ஆணும் பெண்ணும் இணைந்து மேற்கொள்ளும் இல்லற வாழ்வில், அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகே அவர்களின் திருமண வாழ்வு முழுமையடைகிறது. இன்றைய நாட்களில் திருமணமான பல தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காத நிலை ஏற்படுகிறது. பல மருத்துவகளால் பரிசோதிக்கப்பட்டு, தம்பதிகள் இருவருக்கும் உடலில் எந்த குறைபாடும் இல்லை என்று சான்றளிக்கப்பட்ட பிறகும் சில தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைப்பதில்லை. ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக குழந்தை பாக்கியம் ஏன் சிலருக்கு கிடைப்பதில்லை என்பதையும், பிள்ளை பேறு பெற என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இங்கு காண்போம்.

baby

குழந்தை பிறக்க பரிகாரம்

ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒரு நபருக்கு குழந்தை பேறு கிடைக்க அவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 ஆம் வீட்டின் நிலையை கொண்டு அறியலாம். இந்த ஐந்தாம் வீடு பாப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும், அந்த ஐந்தாம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உண்டாகிறது. மேலும் முன்னோர்களின் சாபம், பெண் சாபம், மனிதர்களை கொல்வதால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம், பாம்புகளை கொல்வதால் ஏற்படும் நாக தோஷம் காரணமாகவும் பிள்ளை பேறு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

பாதாம், பிஸ்தா, முந்திரி, காய்ந்த திராட்சை போன்ற உணவுகள் உடலில் உயிரணுக்கள் மற்றும் கருமுட்டைகளின் உற்பத்தியை அதிகரிக்க கூடியது. இந்த அனைத்து பொருட்களிலும் சிறிதளவை ஒரு கிண்ணத்தில் போட்டு, உங்கள் வீட்டு பூஜையறையில் உங்களின் இஷ்ட தெய்வம் படத்திற்கு முன்பு நைவேத்தியமாக வைத்து, பூஜைகளை முடித்த பின்பு அதை தெய்வ பிரசாதமாக கருதி தம்பதிகள் இருவரும் சாப்பிட்டு வரவேண்டும். வீட்டின் பூஜையறையில் குழந்தையாகிய “பாலமுருகன்” மற்றும் “ஆலிலை கண்ணனின்” படத்தை வைத்து பூஜித்து வருவதும் நற்பலனை தரும்.

ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விரதத்தை அனுசரித்து, முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு தீபங்கள் ஏற்றி, அர்ச்சனை செய்து அக்கோவிலில் பக்தர்களுக்கு இனிப்புகளை தருவதும் சிறந்த பரிகாரமாகும். கேரள மாநிலத்தில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு சென்று, குழந்தை கண்ணனை தரிசிப்பதால், அந்த கண்ணனை போன்ற குழந்தை பிறக்கும். சிவபெருமான் கோவிலில் பிரதோஷ தினத்தில் பாலபிஷேகத்திற்கு பாலை தானமாக வழங்குவது நல்ல பலனை தரும். நவகிரகங்களில் “”குருபகவான்” குழந்தை பேறு அருளும் கிரகம் ஆவார். அவரை வியாழக்கிழமைகளில் வழிபட்டு வர வேண்டும்.

- Advertisement -

Amavasai Tharpanam

முன்னோர்களுக்கான திதி வழிபாட்டை “தை, ஆடி, மஹாளய அமாவாசை திதிகளில் மேற்கொள்ள வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உங்கள் திருமண நாள், பிறந்த நாள் போன்ற தினங்களில் புத்தாடைகளை தானம் தந்து, அவர்களுக்கு அன்னதானம் அளித்து அவர்களின் மனம் நிறையச்செய்வதால் இறைவனின் அருளால் பிள்ளை வரம் கிடைக்கும்.

இதையும் படிக்கலேமே:
சூரிய தோஷம் போக்கும் சூரிய பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரசியமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Pariharam for Childless couple in Tamil. Kulanthai pirakka parikaram or pariharam. Pen kulanthai pirakka tips in Tamil, Aan kulanthai pirakka tips in Tamil.