முகத்தை பளபளப்பாக மாற்ற மாம்பழ ஃபேஸ் பேக்

face manago face pack
- Advertisement -

இன்று பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சருமத்தை அழகாக பாதுகாத்துக் கொள்வது தான். ஒரு காலத்தில் இதற்கெல்லாம் பெரிதாக யாரும் கவலைப்பட்டதில்லை. இன்று அப்படி கிடையாது தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதற்கு ஏற்றார் போல இப்போதள்ள சூழ்நிலையும் நம்முடைய சருமத்தை அதிக அளவில் பாதிப்படைய செய்வதாகவே உள்ளது.

இதை சரி செய்வதற்காக அதிக பணம் கொடுத்து அழகு நிலையம் சென்று முகத்தை அழகாக்கி கொள்பவர்களும் உண்டு. இத்துடன் கெமிக்கல் கலந்த தேவையற்ற க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி இதன் மூலம் பக்க விளைவை ஏற்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. இது எல்லாம் தற்காலிகமான தீர்வை மட்டுமே கொடுக்கும். நிரந்தரமான தீர்வு வேண்டுமெனில் அது இயற்கையான முறையில் தான் கிடைக்கும்.

- Advertisement -

இந்த அழகு குறிப்பு பதிவில் இயற்கையான முறையில் தங்களுடைய அழகை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதற்கு அருமையான மூன்று வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ் பேக் முறை சற்று வித்தியாசமானதாக இருந்தாலும் நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். வாங்க இப்போது அந்த ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மாம்பழம் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ்பேக்கிற்கு பயன்படுத்த போக முக்கியமான பொருள் மாம்பழம் தான். இந்த மாம்பழத்தில் அதிகமான அளவு வைட்டமின் சத்துக்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் வயதான தோற்றத்தை தரக்கூடிய ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட இது உதவுகிறது. மாம்பழ ஃபேஸ் பேக் முகத்திற்கு நல்லதல்ல என்ற ஒரு தவறான கருத்தும் உள்ளது. ஆனால் இந்த மாம்பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் முகத்தில் உள்ள பிரச்சனை அனைத்தையும் சரி செய்யக் கூடியதாக இருக்கும்.

- Advertisement -

முகம் பளபளப்பாக மாற

ஒரு மாம்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து நல்ல பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அதிலிருந்து ரெண்டு ஸ்பூன் மட்டும் தனியாக எடுத்து அதே அளவு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பேக் போட்டுக் கொள்ளுங்கள். இதை15 நிமிடங்களுக்கு பிறகு நல்ல தண்ணீர் மூலம் இதை கழுவி விடுங்கள். இதனால் முகத்தில் இருக்கும் கருத்திட்டுகள், கறைகள் போன்றவை நீங்குவதுடன் முகம் பளப்பளப்பாக இருக்கும்.

முகம் மிருதுவாக இருக்க

இதற்கும் இரண்டு ஸ்பூன் அளவு மாம்பழ பேஸ்ட் உடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக குழைத்து முகத்தில் பேக் போட்டு 20 நிமிடம் அப்படியே விடுங்கள். அதன் பிறகு முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் சருமம் மிருதுவாக இருப்பதுடன் தேனிற்கு ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை உண்டு. ஆகவே வறண்ட சருமத்தினர் இதை பயன்படுத்தும் போது நல்ல பலனை காணலாம்.

- Advertisement -

முகம் எப்போதும் பொலிவாக இருக்க

இதற்கும் இரண்டு ஸ்பூன் மாம்பழக் கலவையுடன் கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் முகத்தில் பேக் போட்டு 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவும் போது முகம் பொலிவாக மாறுவதுடன் முகத்தில் இருக்கும் தழும்புகள் முகப்பரு போன்றவை எல்லாம் நீங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் முடிகளை நீக்கும் பீல் ஆஃப் மாஸ்க்

இந்த ஃபேஸ் பேக் முறைகளை அனைத்து சருமத்தினரும் பயன்படுத்தலாம் குறிப்பாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை தரும். மாம்பழத்தை பயன்படுத்தி போடப்படும் இந்த ஃபேஸ் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -