செல்வங்களை அள்ளித்தரும் எமதீபம் இதனை எப்படி வீட்டில் ஏற்றி பலன் பெற வேண்டும் என்பது தெரியுமா

deepam
- Advertisement -

நமது முன்னோர்கள் காலம் காலமாக ஏற்றி வரும் ஒரு தீபவழிபாடு தான் எம தீபம் ஆனால் இதன் பலன்கள் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இதனைப்பற்றி தெரிந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளில் நமது முன்னோர்கள் எம லோகத்தில் இருந்து நமது வீடு தேடி வந்து நம்மை ஆசீர்வதித்து விட்டு செல்வார்களாம். அவர்களை வரவேற்கும் வகையில் இந்த எம தீபம் ஏற்றப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திரியோதசி தின நாளில் தான் அன்னபூரணி தேவிக்கு அட்சய பாத்திரம் கிடைத்தது. அவ்வாறு குபேரர் அவர்களுக்கும் அன்றைய தினத்தில் நிறைய சொத்துக்கள் கிடைத்தது. எனவே மகாலட்சுமியின் அருள் பெறவும், அன்னபூரணி மற்றும் குபேரனின் ஆசி பெறவும் இந்த எம தீபம் ஏற்றவேண்டும். அதுமட்டுமல்லாமல் எமதர்மனின் அருளைப் பெறுவதற்கும் எம தீபம் ஏற்றப்படுகிறது. வாருங்கள் இந்த தீப வழிபாட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

annapoorani

தீபாவளிக்கு முந்தைய தினம் திரியோதசி நாளில் எமன் தனது சகோதர சகோதரிகளுக்கு சீர் கொண்டு செல்லும் தினமாக இருக்கிறது. இந்த தினத்தில் நாம் வீட்டு வாசலில் இந்த விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம் இது நமது சகோதர சகோதரிகள் வாழும் வீடு என்று நினைத்து எமன் நமக்கும் ஆசி வழங்கி செல்வாராம். இதனால் நமது வீட்டில் துர் மரணங்கள் நிகழ்வதை தவிர்க்க முடியும்.

- Advertisement -

அவ்வாறு இந்த தீபத்தை எங்கு எப்படி முறையாக ஏற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். எப்பொழுதும் போல வீட்டின் பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றி வழிபடுதல் கூடாது. நமது வீட்டின் உயரமான பகுதியில் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். அவ்வாறு வீட்டில் இருக்கும் உயரமான பகுதி விளக்கினை ஏற்றுவதற்கு ஏதுவாக இல்லை என்றால் நமது வீட்டின் வாசலில் எம தீபத்தை ஏற்றி வைக்கலாம்.

Home 1

வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கு ஒரு பென்ஞ்ச் போட்டு அதன் மீது விளக்குகளை வைத்து ஏற்ற வேண்டும். நமது வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையில் விளக்கினை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் ஏற்றும் தீபம் மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் தெற்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். இவ்வாறு மொட்டைமாடியில் விளக்கினை ஏற்ற முடியாதவர்கள் வீட்டின் வாசலில் நாம் நுழைவதற்கு இடது புறமாக பென்ஞ்ச் போட்டு அதன் மீது விளக்குகுகளை வைத்து ஏற்றவேண்டும். அன்றைய தினம் வாசலில் கோலம் இட கூடாது.

deepam8

இவ்வாறு இந்த விளக்குகளை ஏற்றுவதன் மூலம் நமது முன்னோர்கள் இந்த விளக்கின் ஒளியில் நமது வீடு தேடி வந்து மீண்டும் எமலோகத்திற்கு திரும்பிச் செல்வதற்கு ஏதுவாக அமையும். இவ்வாறு திரியோதசி நாளில் எம தீபம் ஏற்றி முன்னோர்களின் அருளையும், எமனின் ஆசையையும், மகாலட்சுமி, அன்னபூரணி மற்றும் குபேரனின் அருளையும் பெற்று வளமான வாழ்வைப் பெற மனதார வாழ்த்தி இப் பதிவினை நிறைவு செய்கிறோம்.

- Advertisement -