பெண்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க கண்ணாடி வளையல்களை ஒருமுறை இப்படி அணிந்து பாருங்கள்! உங்களைவிட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் இல்லை என்று ஊரே பேசும்.

bangle

பெண்கள் தங்களுடைய கையில் கண்ணாடி வளையல்களை அணிந்து கொள்வது வீட்டிற்கு சுபிட்சத்தை தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. நாகரிக வளர்ச்சியின் மூலம் எத்தனையோ வகையான வளையல்கள் புழக்கத்திற்கு வந்தாலும் இந்த கண்ணாடி வளையலுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த கண்ணாடி வளையல்கள் எழுப்பக்கூடிய சத்தத்திற்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை. வீட்டுப் பெண்களுக்கு ஒரு வசீகரத்தை தரக் கூடிய தன்மையும் இந்த கண்ணாடி வளையல்களுக்கு உண்டு. இப்படி பல பெருமைகளை தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும் கண்ணாடி வளையல்களை பெண்கள் எந்த முறையில் தங்களுடைய கைகளில் அணிந்து கொண்டால் அவர்களுடைய வசீகரத் தன்மை அதிகரிக்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை பற்றிய சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bangles

பெண்கள் புதன் கிழமை அன்றும், வெள்ளிக்கிழமை அன்றும் புதியதாக கண்ணாடி வளையல்களை வாங்கி தங்களுடைய கையில் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். முடிந்தவரை வெள்ளிக்கிழமை அன்று கையில் போட்டிருக்கும் கண்ணாடி வளையல்களை அவிழ்க்கக் கூடாது. எதிர்பாராத விதமாக அது உடைந்து விட்டால் அதன் மூலம் எந்த ஒரு தவறும் இல்லை.

செவ்வாய்க்கிழமை அன்று புதிய கண்ணாடி வளையல்கள் வாங்கி அணிந்து கொள்வதைத் தவிர்த்து விடலாம். இதைப்போல், கையில் புதிய கண்ணாடி வளையல்களை போடுவதற்கு முன்பாக, ஒரு மஞ்சள் காப்பு கட்டிக் கொள்வது பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Kannadi-valayal

பழைய கண்ணாடி வளையல்களை கையிலிருந்து கழட்டுவதற்கு முன்பாகவே, உங்களுடைய கையில் மஞ்சள் கயிறு ஒன்றை கட்டிக் கொள்ளுங்கள். இதை மஞ்சள் காப்பு என்றும் சொல்லலாம். கையில் கயிறு கட்டிய பின்பு, கையில் இருக்கும் பழைய கண்ணாடி வளையல்களை கழட்டி விட்டு, மீண்டும் புதிய கண்ணாடி வளையல்களை போட்டுக்கொள்வது வீட்டிற்கு அதிகப்படியான சுபிட்சத்தை தரும்.

- Advertisement -

கையில் புதிய கண்ணாடி வளையல்கள் அணிந்த பின்பு, அந்த மஞ்சள் கயிறை அவிழ்த்து விடலாம். இதேபோல் சில பெண்களுடைய முகம் இயற்கையாகவே வசீகரத் தன்மையுடன் இருக்கும். சில பெண்களுக்கு அந்த வசீகரத் தன்மை குறைவாக இருக்கும்.

valaiyal

இப்படிப்பட்ட பெண்கள் தங்களுடைய கையில் மஞ்சள் நிற வளையல்களை அணிந்து கொண்டால், பெண்ணினுடைய அழகு மேம்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் மஞ்சல் வளையல்களை கையில் அணிந்து கொண்டிருக்கும், அந்தப் பெண்கள் அதிர்ஷ்டசாலியான பெண்களாகவும் இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாதவர்களும் இந்த மஞ்சள் வளையல்களை அணிந்து கொண்டால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள்.

bangles

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு கண்ணாடி வளையல்களை பெண்கள் தங்களுடைய கைகளில் அணிந்து கொள்ளலாம். அதில் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. இருப்பினும் சில மாறுதல்களை சாஸ்திர ரீதியாக கொண்டு வரும்போது நமக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும் எனும் பட்சத்தில் அதை பின்பற்றி பார்ப்பதில் தவறு இல்லை. சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்துகொள்ளும்.