நீங்கள் சமையலுக்கு மண் சட்டியை பயன்படுத்துகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது. மட்பாண்டங்களில் சமைத்தால் சமைக்கும் உணவிற்கு என்ன நேரும்?

- Advertisement -

தொன்று தொட்டு நம் முன்னோர்கள் மண்பாண்டங்களில் தான் உணவை பாரம்பரியமாக சமைத்து வருகின்றனர். இன்றும் கூட பலரது வீடுகளில் ஒரு சில உணவு வகைகளை சமைக்க மண்பாண்டங்களை பயன்படுத்துவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் அந்த அளவிற்கு மண்பாண்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்றே கூறலாம். மட்பாண்டத்தில் சமைக்கும் உணவானது ஊட்டச்சத்துக்களை இழக்காமல் அப்படியே அதன் தன்மையை முழுமையாக கொண்டிருக்கும். மேலும் அதில் சமைக்கும் உணவானது அதீத சுவையுள்ளதாகவும் மாறுகின்றன. மண் பாண்டத்தில் சமைக்கும் உணவுகளுக்கு என்ன நேர்கிறது? அதன் நன்மைகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

thanneer-panthal

மட்பாண்டங்களில் தண்ணீரை ஊற்றி பயன்படுத்துபவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஊற்றிய ஒரு மணி நேரத்தில் கால்வாசி தண்ணீர் கீழே வழிந்து ஓடும். இதற்கு மண் மட்பாண்டத்தில் இருக்கும் நுண்ணிய துளைகள் வழியே நீர் கசிவு ஏற்படுவது தான் காரணம். மிக நுண்ணிய துளைகளை கொண்டுள்ள இந்த மட்பாண்டத்தில் சமைக்கும் உணவானது சூடு மற்றும் ஈரப்பதம் இரண்டையுமே சமமாக பரவ செய்யும் எனவே உணவின் ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் நிறைந்து பாதுகாக்கப்படுகின்றன. இதனால் தான் மற்ற பாத்திரங்களை விட மட்பாண்டத்தில் சமைக்கும் உணவுகள் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.

- Advertisement -

மட்பாண்டம் என்பது களிமண்ணால் செய்யப்பட கூடியது ஆகும். இதிலிருக்கும் காரத்தன்மை உணவில் இருக்கும் (PH)பிஹெச் அளவை முறையாக பராமரித்து வரும். அதனால் உணவின் சுவை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஆரோக்கியம் பன்மடங்கு பெருக செய்கிறது. இதில் இருக்கும் இரும்பு, கால்சியம் போன்றவை சமைக்கும் உணவுப் பொருளிலும் கலந்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மட்பாண்டத்தில் சமைக்கும் உணவில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக பெருகுகின்றன. இது நம் உடலுக்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடியது ஆகும்.

man-panai-pot

மற்ற பாத்திரங்களில் நீங்கள் சமைக்கும் பொழுது ஊற்றும் எண்ணெயை விட மட்பாண்டத்தில் நீங்கள் சமைக்கும் பொழுது குறைவாகவே ஊற்றலாம். உணவை மட்பாண்டத்தில் மிதமான தீயில் சமைக்கும் பொழுது நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே இதில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் பாதுகாக்கப்படுகிறது எனவே நாம் அதிகமாக எண்ணெய் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இதனால் மட்பாண்டத்தில் சமைப்பதால் இதயத்திற்கும் வலு சேர்க்கிறது. மட்பாண்டத்தில் உணவை சமைத்து வந்தால் இதய நோய்க்கான அறிகுறிகள் குறையும்.

- Advertisement -

மட்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவானது அதிக சுவையுடன் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இயற்கையாக கிடைக்கும் களி மண்ணிலிருந்து செய்யப்படுவதால் அதன் இயற்கை தன்மை மாறாமல் இருக்கும். குறைந்த தீயில் அதிக நேரம் எடுத்துக் கொண்டு சமைக்கும் உணவின் ருசி அலாதியானதாக இருக்கும். உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் வீணாகாது என்பதால் இயற்கையாகவே உணவின் தரம் உயர்கிறது. மட்பாண்டத்தை பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தும் முன்பு 10 நிமிடமாவது தண்ணீரில் மூழ்கி வைக்க வேண்டும். அதன் பிறகு காய வைத்து எடுத்து சமைத்து பரிமாறலாம்.

முதன் முதலாக மட்பாண்டம் வாங்குபவர்கள் எடுத்தவுடன் அப்படியே கழுவி சமைத்து விடக்கூடாது. மட்பாண்டத்தில் இருக்கும் மண் வாசம் போக வேண்டும். சிறு சிறு மண் துகள்கள் அப்படியே உணவில் கலந்து விடக்கூடும். எனவே முதல் முறை புதிதாக மண்பாண்டம் வாங்குபவர்கள் சிறிது நேரம் அதனை தண்ணீரில் மூழ்கி வைக்கவும். நன்கு உலர்ந்த பின் உங்களிடமிருக்கும் சமையல் எண்ணையை மண்பாண்டத்தின் உள் புறமாக தடவி நிரம்ப தண்ணீரை ஊற்றி குறைந்த தீயில் 2 மணி நேரம் கொதிக்க விடுங்கள். பின்னர் அப்படியே தண்ணீரை ஆற வையுங்கள். இதனால் மட்பாண்டம் திடமாக மாறும். அதன் பிறகு நீங்கள் சமைக்கும் பொழுது எந்த விதமான கசிவும் நுண்துளைகள் மூலம் ஏற்படாமல் இருக்கும். மேலும் மட்பாண்டத்தில் இருக்கும் மண் வாசமும் அகலும்.

clay-pot-cooking2

அதன் பிறகு சமைக்கப்படும் உணவானது ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், ருசி மிகுந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய மட்பாண்டத்தை விடுத்து மற்ற பாத்திரங்களை இன்னுமும் பயன்படுத்துவது ஏன்? கூடுமானவரை உங்களுக்கு எதற்கெல்லாம் மட்பாண்டம் பயன்படுத்த முடியுமோ! அந்த உணவு வகைகளுக்கு எல்லாம் மட்பாண்டத்தை வாங்கி பயன்படுத்துங்கள். குறிப்பாக கீரை மற்றும் பருப்பு உணவை சமைக்க மண் பண்டத்தை பயன்படுத்துவது ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும்.

- Advertisement -