நவகிரக தோஷங்கள் அனைத்தையும் விலகச்செய்யும் அற்புத மந்திரம்

1056
navagragam
- விளம்பரம் -

ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.

navagragha

அந்த வழிகளுள் ஒன்றுதான் தெய்வ மந்திரங்களைப் பாராயணம் செய்வதும். கீழே ஒரு சம்ஸ்கிருத மந்திரமும் தமிழ் மந்திரமும் குறிப்பிட்டுள்ளோம்.  சம்ஸ்கிருத மந்திரம் கடினம் என்று நினைப்பவர்கள் அதற்கு கீழே உள்ள தமிழ் மந்திரத்தை கூறலாம்.இந்த மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நவ கிரக தோஷங்கள் விலகும்.

- Advertisement -

மந்திரம்:

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயனமர்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனி நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டிர் – தரதலித ஹேமாம்புஜ – ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோ – ரந்தரசரீம்

navagragha

மந்திரத்தின் பொருள்:
‘தேவீ, உன்னுடைய வலக் கண் சூரியனைப் போன்று திகழ்ந்து பகலை ஏற்படுத்துகிறது; உன்னுடைய இடக் கண் சந்திரனைப் போன்று திகழ்ந்து இரவை உண்டாக்குகிறது; இரண்டுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது கண்ணோ, அப்போதுதான் சிறிதே மலர்ந்த பொற்றாமரை மலரைப் போல் திகழ்ந்து, இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தை உணர்த்துகிறது. எனவே தேவீ, நீயே காலங்களைப் படைப்பவளாக இருப்பதுடன், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்கிறாய்.

navagaraga

இந்த சம்ஸ்கிருத மந்திரத்தை சொல்வது கடினம் என்று நினைப்பவர்கள் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்யலாம்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

Advertisement