பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்

amman

பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தோஷங்களை போக்க உதவும் ஒரு அற்புதமான காயத்திரி மந்திரம் இதோ.

manthiram

காயத்ரி மந்திரம்

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

பொது பொருள்

அனைத்தையும் படைத்தவரும், எல்லாவற்றிற்கும் தலைவனாகவும் இருக்கும் அந்த பரமாத்மாவை நாங்கள் தியானிக்கிறோம். அந்தப் பரமாத்மாவின் தெய்வீக ஒளியே உலகில் இருக்கும் அனைத்து விடயங்களின் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றிலும் பிரதிபலிக்கிறது. அப்படியான அந்த தெய்வீக பேரொளி எங்களுக்கு ஞானம் வழங்க வேண்டுகிறோம்.

gayatri

- Advertisement -

இந்த மந்திரத்தை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதன் பலன் தெரியாததால் இதை ஜெபிக்காமல் விட்டிருப்போம். இந்த மந்திரத்தை தினசரி ஜெபிப்பதன் மூலமாக, நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும். அனைத்து மந்திரங்களுக்கும் தாய் போன்றது காயத்திரி மந்திரம். ஆகையால் இந்த காயத்திரி மந்திரத்தை ஜெபித்து பலனை அடையுங்கள்.

om

காயத்ரி மந்திர ஜெபம்

காயத்ரி என்பவள் நான்கு வேதங்களின் தாய் என கூறப்படுகிறது. அனைத்து வேதங்களின் சாராம்சமும் இந்த ஒரு காயத்ரி மந்திரத்தில் அடங்கியுள்ளது. காயத்ரி மந்திரம் மூன்று பிரிவுகளாக இருக்கிறது. முதலாவது இறைவனின் புகழைப் பாடுதல், இரண்டாவது இறைவனின் மீது தியானம் செய்வது, மூன்றாவது பிரார்த்தனை. காயத்ரி என்பது சக்தியின் வடிவம். சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியர்களின் ஒன்று திரண்ட ஆற்றல் தான் காயத்ரி மந்திரம். பிரபஞ்சத்தையே உள்ளடக்கிய மந்திரம் தான் இந்த காயத்ரி மந்திரம். மற்ற எந்த மந்திரங்களையும் துதித்து வழிபடாதவர்கள் கூட இந்த ஒரு காயத்ரி மந்திரத்தை மட்டும் துதித்து வருவதால் அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களும், நன்மைகளும் ஏற்படுவது உறுதி.

gayatri

காயத்ரி மந்திரம் துதிப்பதற்கான காலம்

காயத்ரி மந்திர பாராயணத்திற்கு குறிப்பிட்ட நாள், நேரம் என்று ஏதுமில்லை. ஆனால் முதன் முதலில் காயத்ரி மந்திரம் துதிக்க தொடங்குபவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமைகயில், பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி அளவில் வீட்டிலிருக்கும் பூஜையறையில் பஞ்சமுக குத்து விளக்கு தீபமேற்றி, தேவி படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து, இம்மந்திரத்தை துதிக்க தொடங்கலாம். எவ்வளவு அதிக எண்ணிக்கையில் இந்த மந்திரத்தை துதிக்கிறோமோ, அந்த அளவிற்கு பலன்கள் விரைந்து கிடைக்க வழி வகை செய்கிறது. தினமும் பிரம்மமுகூர்த்த நேரத்திலேயே இம்மந்திரத்தை ஜெபித்து வந்தால் மிகச் சிறந்த பலன் வெகு விரைவிலேயே கிடைப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

om

காயத்ரி மந்திர பலன்கள்

அனைவரும் எளிதில் துதித்து வழிபடக்கூடிய இந்த காயத்ரி மந்திரத்தை உளமார துதித்து வருபவர்களுக்கு உடல், மனம், ஆன்மா ஆகியவற்றால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணிய பலன் உயருகிறது. மிக அதிக காலம் இம்மந்திரத்தை பாராயணம் செய்பவர்களுக்கு தங்களின் இஷ்ட தெய்வ தரிசனமும் கிடைக்கும் சாத்தியம் உண்டாகிறது. காயத்ரி மந்திரம் துதிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைத்து வகையான நோய், வறுமை, ஆபத்துகள் ஆகியவற்றிலிருந்து காக்கப்படுகிறார்கள். பலவிதமான தெய்வீக ஆற்றல்கள் இந்த காயத்திரி மந்திரம் துதிப்பவர்களுக்கு கிடைக்கும். சித்தர்கள், மகான்கள் மட்டுமே அடையக்கூடிய ஞான நிலை இம்மந்திரம் துதிப்பவர்களும் அடைவார்கள். உண்மையான மன மகிழ்ச்சி மற்றும் மன அமைதி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
துன்பங்களை நீங்கச்செய்யும் 9 நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் தெரியுமா?

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Gayatri mantra in Tamil. It is also called as Gayatri manthiram or Gayathiri manthiram in Tamil.