உங்களை நோக்கி பணம் தினம் தோறும் வந்து கொண்டே இருக்க வேண்டுமா? இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள்

நம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள அத்தியாவசியமாக தேவைப்படுவது பணம். இந்தப் பணத்தினை நாம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் ஆழ் மனதில் விதைக்கும் விதை தான் முளைந்து செயல்பாடாக வெளியே வருகிறது. உங்கள் ஆழ் மனதில் பணத்திற்கான விதையை எப்படி விதைப்பது? மிகவும் சுலபம். இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும். உங்களுக்கான மந்திரம் இதோ

money

“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”

money bag

நீங்கள் தினம்தோறும் காலையில்  எழுந்து குளித்து முடித்த உடன் 6 மணிக்கு இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்க வேண்டும். கண்களை மூடி உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த இறைவனின் முன்பு இந்த மந்திரத்தை 108 முறை ஆழ்மனதில் மனதார ஜெபியுங்கள். பணத்தினை தினமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும். அதற்கான முயற்சிகளில் நீங்கள் உங்களை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் விடா முயற்சியை தூண்டும் சக்தி இந்த மந்திரத்திற்கும் உள்ளது. எப்படியாவது ஏதாவது செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதிற்குள் நீங்கள் அறியாமலேயே வந்துவிடும். உங்கள் மனதில் அந்த எண்ணம் வந்து விட்டாலே போதும் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விடுவீர்கள். பணத்தை தேடி நீங்கள் போக வேண்டாம். அந்தப் பணம் உங்களைத் தேடி வரும் பாருங்கள்!

இதையும் படிக்கலாமே
நீங்கள் அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் பெற வேண்டுமா? இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam kidaikka mantra in Tamil. Panam pera manthiram in Tamil. Panam kozhikka slogam in Tamil. mantra for money in Tamil. Panam sera mantra in Tamil.