வீட்டில் தீபம் ஏற்றும் சமயத்தில் இன்று கூறவேண்டிய சுலோகம்

DEEPAM2
- Advertisement -

கார்த்திகை தீபமான இன்று திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வர ஜோதி வடிவில் தன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அனைவராலும் திருவண்ணாமலைக்கு சென்று ஜோதி வடிவான அண்ணாமலையாரை இன்று நேரில் தரிசிக்க முடியவில்லை என்றாலும் வீட்டில் தீபம் ஏற்றும் சமயத்தில் கீழே உள்ள ஸ்லோகத்தை கூறி அண்ணாமலையாரின் அருளை பெறலாம்.

neideepam

தீப வெண்பா:

- Advertisement -

“புத்திதரும் தீபம் நல்லபுத்திரசம் பத்துமுண்டாம்
சித்திதரும் தீபம் சிவதீபம் – சக்திக்கு
உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்
பயிராகும் கார்த்திகைத் தீபம் ”

அருணாச்சல புராணத்தில் உள்ள சுலோகம்:

- Advertisement -

கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியிற் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர்நாளில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் அது பணிந்தோர், கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்தி வரம் கொடுப்போம்.

என்று அருணாச்சல புராணத்தில் சிவன் கூறி உள்ளார்.

- Advertisement -

deepam

இதையும் படிக்கலாமே:
இவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்

மலைமேல் ஜோதிவடிவாக உள்ள சிவனை தரிசிப்பதே உசிதம் என்றாலும் நாம் வீட்டில் ஏற்றும் தீபத்தில் சிவ ஜோதியை கண்டு ஆனந்தம் கொண்டு அவரின் அருள் பெறுவோம்.

deepam

இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்கள், ஆன்மீக கதைகள் மற்றும் மந்திரங்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

- Advertisement -