கடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்

2787
- விளம்பரம் -

இன்றைய நவீன உலகில் பலரின் வீட்டில் முக்கிய பிரச்னையாக இருப்பது கடன் தொல்லை. ஒருவரிடம் கை நீட்டி காசு வாங்குவது மட்டுமே கடன் ஆகாது. மாதாமாதம் நாம் வங்கிகளில் செலுத்தும் வட்டியும் கடன் தான்.

சம்பாதிக்கும் காசில் பாதிக்கு மேல் வட்டிகட்டுபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். இப்படி நம் வருமானத்தை அப்படியே விழுங்கும் கடன் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக எளிய வழிமுறை இதோ.

- Advertisement -

ஒரு தட்டில் நவதானியங்களை பரப்பி அதற்கு மேல் மண்ணால் செய்யப்பட்ட ஐந்து அகல்விளக்குகளை வைத்து அதில் சிகப்பு திரி போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிய பின்னர் கீழே உள்ள இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

ஓம் ஜய ஜய ஸ்ரீ ஐஸ்வரிய லஷ்மி.
ஓம் கிரீம் நசி மசி மசி நசி
சர்வ கடன் சத்ரு ரோகம் தோஷம்
நசி நசி நசி சுவாஹா

அதிகாலை 3.30 மணியில் இருந்து 7 மணிக்குள் இந்த மந்திரத்தை 108 முறை தொடர்ந்து 11 நாட்கள் ஜெபிக்கவேண்டும். 12ம் நாள், இந்த பூஜைக்கு உபயோகப்படுத்திய நவதானியம் மற்றும் விளக்கை கடலில் போட்டு விட்டு குளித்து விட்டு வர வேண்டும். இப்படி செய்தால் கடன் தொல்லை படிப்படியாக குறைந்துகொண்டே வரும்.

மேலும் இந்த பூஜையில் ஈடுபடும் 11 நாட்களும் மிகவும் சுத்தபத்தமாக இருந்து முழுமனதோடு இறைவனை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி செய்யவேண்டும். இல்லையே முழு பலன் கிடைக்காது.

Advertisement
SHARE