வாழ்வின் அணைத்து தடைகளும் நீங்க சித்தர் அருளிய மந்திரம்.

12120
Agathiyar
- விளம்பரம் -

எடுத்த காரியங்களை தொடர்ந்து முடிக்கமுடியாமல் பலரும் தவித்துவருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கும் விதமாக, காரியத்தில் உள்ள அணைத்து தடைகளையும் தீர்க்கவல்ல நரசிம்ம மந்திரத்தை போகரின் சீடனான புலிப்பாணி சித்தர் நமக்காக அருளி இருக்கிறார்.

விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரமே தசாவதாரத்திலேயே மிக உக்கிரமான அவதாரமாக கருதப்படுவது. இந்த அவதாரத்தின் முக்கிய நோக்கமே துர் சக்தியான ஹிரண்யகசிபுவை வதம் செய்வது தான்.  ஆகையால் நாம் வாழ்வில் வெற்றிபெறுவதற்கு தடையாக ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் அதை நம்மிடம் அண்டவிடாமல் காக்கும் வல்லமை நரசிம்மருக்கு உண்டு என்பதில் மாற்று கருத்தே இல்ல.

- Advertisement -

இத்தகைய சிறப்பு வாய்ந்த நரசிம்மரின் ஸ்லோகத்தை நமக்காக அருளியுள்ளார் புலிப்பாணி சித்தர். இந்த ஸ்லோகத்தில் நாம் அனைவரும் படித்து பயன்பெறுவோம்.

மந்திரம்:

பாரடா நரசிங்கஞ் சொல்லுக் கேளு

பாங்காக ஓம் சிங்கமுகாவா ஓம் ஓம்

கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்

குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்

தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்

திரமாக நரசிங்க ராஜா வானை

சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று

சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே 

ஓம் சிங்கமுகவா ஓம் ஓம் நரசிங்க

ராஜா ஆணை ஸ்ரீம் கிலீம் சுவாஹா

                                               – புலிப்பாணி ஜாலத்திரட்டு 81

இந்த மந்திரத்தை இலட்சமுறை தொடர்ந்து ஜபித்தால், நம்மை சுற்றி உள்ள அணைத்து தீய சக்திகளும் பறந்தோடும்.

சனி பெயர்ச்சி 2017 – 2020 பற்றி தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்

காணவே ஓம் சர்வாப்தா நாதா

கனிவாக ஓம்படு சுவாஹா வென்று

வானவே லட்சமுரு செபித்துத் தீரு

வளமான தர்ப்பணமும் மோமான்னங்

கோணாமற் பூசையது பெலத்தச் செய்நீ

குணமாகச் சாமமது சித்தியாகும்

நாணாது நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்

நாயகனே பிசாசுமுதற் பூதம் போமே.”

                                                            – புலிப்பாணி ஜாலத்திரட்டு 82

இந்த மந்திரத்தை இலட்சம் முறை ஜபித்த பின்னர் தர்ப்பணம்,ஹோமம், அன்னதானம், பூசை போன்ற அனைத்தையும் செய்யவும். இவை அனைத்தையும் முறையாக செய்துவிட்டால் ஒரு சாமத்தில் நினைத்த காரியம் வெற்றிபெறுவதற்கான வழி பிறகும். அதோடு தீய சக்திகளும் நம்மை விட்டு ஓடும்.

 

Advertisement