மார்கழி மாத ராசி பலன் 2023 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

margali rasi palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிம்மதியான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த பண வரவு கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை சமாதானம் அடைந்து சந்தோஷமாக வாழ்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற உயர்வு கிடைக்கும் மாதமாக இந்த மாதம் திகழும். விரும்பிய சலுகைகளைப் பெற விருப்பப்பட்டு உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் தனியாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். லாபத்தை அதிகரிக்க பல வழிகளில் முயற்சியும் செய்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன தைரியத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதைவிட அதிகமாகவே செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் தீர ஆலோசித்து செய்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். யாரிடமும் எந்த பொறுப்புகளையும் நம்பி ஒப்படைக்காமல் தாமே செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். அதனால் தொழிலை விரிவு படுத்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்புடன் தொழிலை விரிவு படுத்தினால் அது நன்மையாக முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அண்ணாமலையாரை வணங்க வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருந்தாலும் அதைவிட அதிகமான செலவுகள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த அனுசரித்து செல்வதன் மூலம் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள முடியும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை ஒரு சிலருக்கு லாபம் அதிகமாகவே இருக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கி சுமூகமாக நடைபெற நல்ல வாய்ப்பு ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. அதே சமயம் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உடல் நலத்தில் மிகவும் கவனம் தேவை. சிறு உபாதை ஏற்பட்டாலும் அதற்குரிய மருத்துவரை அணுகி பார்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை கூடுதலாக தான் இருக்கும். யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்காமல் தாமே செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையில்லாத விஷயங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பிரகதீஸ்வரர் பெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். பண வரவிற்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முற்காலத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் மாதமாக இந்த மாதம் திகழ்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்வதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலை பொருத்தவரை கடினமாக உழைத்தால்தான் லாபம் கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு காளஹஸ்திநாதரை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. ஒரு சிலருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். முறையாக அந்த வேலையை செய்து முடிக்காவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. சிறிய விஷயமாக இருந்தாலும் அதை பெரிதாக நினைத்து தகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றினால் தான் பிற்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மாரியம்மனை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்ற மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு பல வழிகளிலும் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபதாபங்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் நிம்மதியாக வாழலாம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக லாபம் கிடைக்கும். எப்போதோ செய்த முதலீட்டால் இப்பொழுது பலனை பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். இந்த மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நாராயண பெருமாளை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பகுத்தறிந்து செயலாற்றும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு எதிர்பார்த்து அளவிற்கு இருக்கும். தேவையற்ற செலவுகளும் ஏற்பாடாது. உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திருமண வரன் அமைவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழலில் நிலவுகிறது. உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்று விரும்பிய சலுகைகளை பெரும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு போக பல புதிய மாற்றங்களை செய்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பழனி முருகனை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிரிகளை வெற்றி கொள்ளும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிகமான பண வரவு ஏற்படும். அதனால் வங்கிக் கணக்கில் சேமிப்பு உயரும். வயிறு சம்பந்தப்பட்ட ஆரோக்கிய சீர்கேடு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளை எளிதில் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அதை வெற்றிகரமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். அதனால் சலுகைகள் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை மேலும் செம்மையாக நடத்த முயற்சி செய்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தடைகளை நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் இருப்பவர்களிடம் நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். தொழிலைப் பொருத்தவரை லாபம் சுமாராகத்தான் இருக்கும். வரவிற்கேற்ற செலவு என்னும் சூழ்நிலையே உண்டாகும். நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்பதன் மூலம் பல பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குழப்பம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை ஓரளவுக்கு சுமாரான பணவரவு ஏற்படும். அதைவிட அதிகமாகவே செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை பெரிதாகாமல் தவிர்க்க முடியும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை கூடுதலாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும் என்றாலும் தேவையற்ற முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து பிறகு செயலாற்றுவது நன்மையை ஏற்படுத்தும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு யோக நரசிம்மரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன நிம்மதி ஏற்படும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். யாரிடமும் பேசுவதற்கு முன்பு ஒரு முறைக்கு பலமுறை யோசித்து பேசுவதன் மூலம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். வேலையை சிறப்பாக செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்த தொழில் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கள்ளழகரை வழிபட வேண்டும்.

- Advertisement -