- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க வாராகி சூட்சும வழிபாடு

நினைத்தது நடக்க வாராகி சூட்சும வழிபாடு

- Advertisement -

வாராகி அம்மனை வழிபாடு செய்யக்கூடிய பக்தர்கள் இன்றைய காலத்தில் அதிக அளவில் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபடாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு இந்த காலகட்டத்தில் வாராகி அம்மனின் வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்று வாராகி அம்மனை எந்த முறையில் வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாராகி சூட்சும வழிபாடு

மார்கழி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் வராக மூர்த்தி அவதாரம். அதேபோல்தான் அம்பிகையின் அவதாரங்களில் வாராகி அவதாரமும் ஒன்றாக திகழ்கிறது. அண்ணனும் தங்கையும் ஒரே மாதிரி அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்பதால் வாராகி அம்மனை மார்கழி மாதத்தில் வழிபாடு செய்யும்பொழுது பெருமாளின் அருளும் வாராகி அம்மனின் அருளும் பரிபூரணமாகவே கிடைக்கும் என்று கூட கூறலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி திதியில் ராகு காலம் எமகண்டம் தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நம்முடைய வீட்டில் வாராகி அம்மனின் படம் அல்லது சிலை இருக்க வேண்டும். ஒரு வேளை வீட்டில் வாராகி அம்மனின் படமோ சிலையோ இல்லை என்பவர்கள் அருகில் எந்த ஆலயத்தில் வாராகி அம்மன் இருக்கிறார்களோ அந்த ஆலயத்திற்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு நமக்கு தேவைப்படுவது முனை உடையாத விரலி மஞ்சள் தான். 27 என்ற எண்ணிக்கையில் விரலி மஞ்சள் எடுத்து மஞ்சள் நிற நூலால் மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய சிலை படமாக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்றார் போல் கட்டிக்கொள்ள வேண்டும். கோவிலில் இருக்கக்கூடிய வாராகி அம்மனுக்கு தருவதாக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்றார் போல் சற்று இடைவெளி விட்டு விரலி மஞ்சளை கட்டிக்கொள்ளுங்கள். எண்ணிக்கை 27 இருக்க வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு விரலி மஞ்சளை கட்டும் பொழுது என்ன வேண்டுதல் நமக்கு நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை முழுமனதோடு நினைத்து கட்ட வேண்டும். ஒரே ஒரு வேண்டுதலை நினைத்துதான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாலையை கட்டி முடித்த பிறகு வீட்டில் செய்பவர்கள் வராகி அம்மனின் படத்திற்கு அந்த மாலையை சாற்றி விட்டு தீபம் ஏற்றி வைத்து வாராகி அம்மனுக்கு பிடித்தமான நெய்வேத்தியங்களை வைத்து உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

ஆலயத்திற்கு செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் ஆலயத்திற்கு சென்று இந்த மாலையை கொடுத்து வாராகி அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து விட்டு வீடு திரும்பி வரவேண்டும். வீட்டில் விரலி மஞ்சள் மாலையை சாற்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் மறுநாள் இந்த விரலி மஞ்சளை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

இந்த முறையில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனுக்கு மாலை சாட்சி வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும், நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்