மார்கழி மாதம் இந்த 1 தானத்தை மட்டும் செய்தால் அதை விட பெரிய பாக்கியம் உங்களுக்கு ஒன்றும் இருக்க முடியாது!

kambali-vishnu

மார்கழி மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்குரிய அற்புதமான மாதமாக ஆன்மீகம் குறிப்பிடுகிறது. ஒரு சிலர் மார்கழியை பீடை மாதம் என்றும் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் மார்கழி மாதம் பீடை மாதம் அல்ல. மிகவும் சக்தி வாய்ந்த மாதமாகும். பிரபஞ்சத்தில் மார்கழியில் தான் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. அதனால் தான் அதிகாலையிலேயே எழுந்து கோலம் போடுமாறு முன்னோர்கள் வழிவகுத்து சென்றுள்ளனர். நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு காரணங்கள் இருப்பதை இதன் மூலமும் நாம் அறியலாம்.

Margali

மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலத்தில் இருந்து வரும் சுத்தமான காற்றைப் போல் வேறு எந்த மாதத்திலும் நமக்கு கிடைப்பதில்லை. இம்மாதத்தில் செய்யும் இந்த ஒரு தானம் நமக்கு பெரும் பாக்கியத்தை சேர்க்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. அப்படி நாம் எதை தானம் செய்ய வேண்டும்? யாருக்கு தானம் செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பொதுவாகவே நம் உடலில் 80% ஆக்சிஜனும், 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நவீன யுகத்தில் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களால் நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை விரட்டி அடிக்க போராட வேண்டி உள்ளது. இதனால் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போய் விடுகிறது. இம்மாதத்தில் நீங்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைத்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதனால் நோய் தொற்றுகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

coronovirus1

மார்கழி மாதத்தில் தானம் செய்வதும் பாவங்களை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தானங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வகையில் மார்கழி மாதத்தில் நீங்கள் செய்யும் இந்த தானம் உங்களுக்கு பெரும் பாக்கியத்தை கொண்டு வரும். மார்கழி மாதம் என்றாலே குளிர் காலமாக இருக்கிறது. அதிக பனி பெய்யும் இந்த காலத்தில் வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி இருந்தாலும் இரவு தூங்கும் பொழுது இந்த குளிரை தாங்க முடியாமல் அவதிப்படுவார்கள்.

- Advertisement -

அத்தகையவர்களுக்கு கம்பளி தானம் கொடுக்க வேண்டும். இந்த தானத்தை மார்கழி மாதத்தில் செய்வதால் உங்களுக்கு நிறைய புண்ணியங்கள் வந்து சேரும். எவ்வளவோ பேர் நடைபாதைகளில் நம் கண் முன்னே போர்த்திக் கொள்ள போர்வை கூட இல்லாமல் இருப்பார்கள். மார்கழிப் பனியை தாங்கும் அளவிற்கு அவர்களிடம் உடலில் பலமும் இருப்பதில்லை. இதனால் இம்மாதத்தில் உங்களால் முடிந்தவரை யாராவது ஒருவருக்காவது இது போல் கம்பளி தானம் செய்து வாருங்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்குமோ! இல்லையோ! அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்.

kambali

அதுபோல் மார்கழி மாதங்களில் இரவு நேரத்தில் நீங்கள் கோலம் போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதிகாலையில் கிடைக்கும் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காகவே வாசலில் கோலம் போடப்படுகிறது. அதனை சோம்பேறித்தனப்பட்டு இரவே போட்டு வைப்பதால் ஒரு பலனும் இல்லை. அதிலும் கோலத்தை போடுவதில் கூட சிறு தானம் இருக்கின்றது. கோலமானது பச்சரிசியில் போடப்பட வேண்டும். அதை சாப்பிட வரும் எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மூலம் நமக்கு புண்ணியம் சேரும். அழகுக்காக கோலமாவில் கோலம் போடுவதால் என்ன நன்மை இருக்கிறது? என்பதை நீங்களே சற்று சிந்தியுங்கள்!

இதையும் படிக்கலாமே
உங்கள் சமையலறை துர்நாற்றம் இல்லாமல் லட்சுமி கடாட்சத்துடன் எப்போதும் இருக்க இப்படி மட்டும் செய்து விடுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.