உங்கள் சமையலறை துர்நாற்றம் இல்லாமல் லட்சுமி கடாட்சத்துடன் எப்போதும் இருக்க இப்படி மட்டும் செய்து விடுங்கள்.

kitchen

ஒரு வீடு என்றாலே மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தாலே லக்ஷ்மி கடாட்சம் வந்துவிடும். பெண்கள் இல்லாத வீடு வீடே அல்ல என்று பலர் கூறக் கேட்டிருப்போம். பெண்களுக்கே உரிய குணம் சுத்தம் என்பது. அதிலும் ஒரு சிலர் மாற்றுக் கருத்து உடையவர்களாக இருப்பார்கள். அது வேறு விஷயம். ஆனால் பொதுவாகவே பெண்கள் இருக்கும் வீடு மகாலட்சுமி அம்சம் பொருந்தியதாக இருக்கும். அதிலும் அவர்கள் பயன்படுத்தும் சமையல் அறை சுத்தமாக இருந்தால் நிச்சயம் அந்த வீடு செல்வ செழிப்புடன் இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய சமையல் அறையில் துர்நாற்றம் இல்லாமல் புத்துணர்வுடன் இருப்பதற்கு இந்த டிப்ஸை நீங்கள் பயன்படுத்தலாம். அதைப் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

plant-in-kitchen

வீட்டில் இருக்கும் அறைகளில் சமையலறை என்பது மிகவும் முக்கியமானது. சமையலறையில் எப்பொழுதும் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. சமையலறையில் தண்ணீர் தேங்கி நின்றால், அந்த வீட்டில் கடன் தொல்லைகள் நிச்சயமாக இருக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது போல் இரவு நேரங்களில் சமயலறையில் இருக்கும் பாத்திரம் கழுவும் சிங்கிள் எச்சில் பாத்திரங்கள் இருக்கக் கூடாது.

காலை முதல் இரவு வரை நீங்கள் இந்த வேலையை செய்யா விட்டாலும், இரவு நேரத்தில் எப்படியாவது எச்சில் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்து விட வேண்டும். இரவு நேரத்தில் சமையல் அறையில் அன்னபூரணியும், மகாலட்சுமியும் வருவதாக ஐதீகம் உள்ளது. அதனால் தான் அந்த நேரத்தில் எச்சில் பாத்திரங்களை போட்டு வைக்கக் கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

sink-water

இரவு தூங்க செல்லும் முன் இந்த வேலையெல்லாம் செய்து விட்டு ஒரு முறை கிச்சன் மேடையை மற்றும் அடுப்பை இவ்வாறு சுத்தம் செய்து விட வேண்டும். ஒரு சிலர் எல்லாம் வாரத்திற்கு ஒரு முறை தான் அடுப்பை சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறான செயலாகும். நீங்கள் எவ்வளவு வேலை செய்தாலும், இரவு தூங்கும் முன் அடுப்பை ஒரு முறை ஈரத்துணியால் துடைத்து எடுத்து விட்டு தூங்கச் செல்லுங்கள்.

- Advertisement -

அடுப்பு என்பது அன்னபூரணியின் அம்சம். அதற்குரிய மரியாதையை நீங்கள் கொடுக்கா விட்டால் வீட்டில் பண கஷ்டம் மற்றும் வறுமை ஏற்படும் அபாயம் உண்டு. ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறு கலந்த இந்த தண்ணீரை கொண்டு அடுப்பு மற்றும் அடுப்பங்கரை மேடையை ஒரு முறை துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

elumichai lemon

இதனால் அடுப்பங்கரை முழுவதும் இருக்கும் துர்நாற்றங்களை எல்லாம் இந்த எலுமிச்சை மூடி தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும். எப்போதும் புத்துணர்வுடன் உங்களுடைய சமையலறையை வைத்துக் கொள்ள உதவும். எலுமிச்சை மூடியைத் தூக்கி எறியாமல் அப்படியே சமையலறையின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். சமையலறையில் சுற்றிக் கொண்டிருக்கும் குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் கூட இந்த எலுமிச்சை மூடி இருந்தால் அருகில் கூட வராது.

elumichai

நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எலுமிச்சை மூடிகளை எப்பொழுதும் தூக்கி எறியாமல் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சை மூடிகளை கிச்சன் அலமாரிகளில் மற்றும் ஆங்காங்கே போட்டு வைத்தால் போதும். அதனுடைய வாசத்திற்கு பூச்சிகள் அண்டாது. மேலும் சமையலறையில் இருக்கும் துர்நாற்றத்தையும் ஈர்த்து சமையலறையை எப்பொழுதும் புத்துணர்வுடன் மகா லட்சுமி கடாட்சத்துடன் வைத்திருக்கும். அது போல அடுப்பை காலியாக வைக்கக் கூடாது. ஏதாவது ஒரு தட்டோ, பாத்திரமோ மேலே வைய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
மார்கழி மாதம் முழுவதும் இப்படி செய்தால், உங்களுடைய வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். நீங்கள் கேட்ட வரத்தை இறைவன் உடனே தந்து விடுவார்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.