மார்கழியில் செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை

lakshmi kuberar dheepam
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே வழிபாட்டிற்குரிய மாதம் தான். இந்த மாதத்தில் நாம் பெருமாள், அம்பிகை போன்றோரை வழிபடுகிறோம். ஆனால் குபேரருக்கும் இது உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் குபேரரை நினைத்து நாம் செய்யும் இந்த எளிய வழிப்பாடானது நம்மை இனி வரும் காலம் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ வைக்கும். அந்த பூஜை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மார்கழியில் செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை

இந்தப் பூஜை செய்ய நாம் தேர்ந்தெடுக்கும் நாள் தான் மிகவும் முக்கியமானது. மார்கழி மாதத்தில் வரக் கூடிய கடைசி வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜை செய்ய வேண்டும். அன்றைய நாளில் செய்யும் இந்த பூஜை வரும் தையில் உங்களுக்கு செல்வ செழிப்பான வருடமாக அமையும்.

- Advertisement -

இந்த பூஜை செய்வதற்கு முதல் நாள் வியாழக்கிழமை வரும். வியாழக்கிழமை குபேரருக்கு உகந்த நாள் ஆகையால் அன்றைய தினமே வீட்டில் பூஜை அறையெல்லாம் சுத்தம் செய்து வியாழன் மாலை குபேரரை நினைத்து நீங்கள் எப்போதும் போல் செய்யும் குபேர பூஜை செய்து விடுங்கள். இதை செய்ய செய்யாதவர்கள் வீட்டில் தீபம் ஏற்றினாலே போதும்.

அடுத்து வெள்ளிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த பூஜை செய்ய வேண்டும். அதற்கு 24 வெற்றிலை, 12 கொட்டைப்பாக்கு தேவை. இத்துடன் குபேரருக்கு நெய்வேத்தியமாக நல்ல இனிப்பான பால் பாயாசத்தை செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்ய குபேரர் படம் இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள் இல்லை எனில் மகாலட்சுமி தாயார் படத்தையும் வைத்து வணங்கலாம் .

- Advertisement -

நீங்கள் வாங்கி வைத்திருக்கும் 24 வெற்றிலையை இரண்டிராண்டாக வைக்க வேண்டும். அதாவது 12 வெற்றிலையாக வரிசையாக வைக்க வேண்டும். இந்த வெற்றிலைக்கு மேல் பண்ணிரெண்டு கொட்டைப்பாக்கையும் வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் வையுங்கள். 12 வெற்றிலை மேலேயும் ஒரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும்.

இப்போது 108 சில்லறை நாணயத்தை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நிரப்பி விடுங்கள் தீபத்தின் முன் அமர்ந்து இந்த சில்லறை நாணயத்தை கையில் எடுத்து ஓம் குபேராய நமக என்ற நாமத்தை சொல்லி மறுபடியும் அந்த தட்டில் கொட்டுங்கள் இதே போல் 108 முறை செய்ய வேண்டும். இந்த சில்லறை நாணயம் நீங்கள் கையில் எடுத்து மீண்டும் தட்டில் கொட்டும் போது எழுப்பும் ஒளி குபேரருக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் மறுபடியும் செய்ய வேண்டும் வெற்றிலை நாணயம் எல்லாம் அதையே இருக்கட்டும் நெய்வேத்தியம் மட்டும் புதிதாக வேறு பாயாசம் செய்து வைக்க வேண்டும் இவையெல்லாம் செய்து முடித்த பிறகு அந்த ரூபாய் நாணயத்தை நீங்கள் புழக்கத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் மற்றவற்றை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழையடி வாழையாக வாழ வாழைப்பூ பரிகாரம்

மார்கழி மாதத்தில் செய்யப்படும் இந்த குபேர பூஜை ஆனது உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை நிலையை மாற்றி செல்வ செழிப்புடன் வளமாக வாழ வைக்கும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -