மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை

krishna kolam podum
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே அது பீடை மாதம் என்ற தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. மார்கழி மாதம் பீடு நடை போட்டு நடக்கும் மாதம் என்ற வழக்கு மருவி இத்தகைய பெயர் வந்து விட்டது. மார்கழி மாதம் என்றாலே இறைவழிபாட்டிற்கு உகந்த மாதம். ஆகையால் தான் மகாபாரதத்தில் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்லி இருக்கிறார்.

இந்த மார்கழி மாதத்தில் தான் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதேசி திருநாளும் வருகிறது. அத்தனை சிறப்பு மிகுந்த இந்த மாதத்தில் சில விஷயங்களை நாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்லி இருக்கிறது. அது என்னென்ன விஷயங்கள் என்பதை ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை

இந்த மார்கழி மாதத்தில் நாம் அதிகாலைக்கு மேல் தூங்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டின் நிலை வாசலில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சமும் செல்வ செழிப்பும் உண்டாகும்.

அறிவியல் ரீதியாகவும் இந்த விஷயத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழும் போது இயற்கையாக கிடைக்கக் கூடிய ஆக்ஸிஜனின் அளவு நமக்கு அதிகமாக கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மார்கழி மாதத்தில் விதைக்க கூடாது என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் இந்த மாதத்தில் விதைகள் முளைத்து வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆகையால் இந்த மாதத்தில் விதைத்தால் விதை சரியான உயிர் தன்மை பெற்று வளராமல் போய் விடும். ஆகையால் தான் இந்த மாதத்தை விதை விதைப்பதற்கான சரியான காலம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று சொல்வதற்கான காரணமும் இது தான்.

அடுத்து மார்கழி மாதத்தில் இரவில் கோலம் போடக் கூடாது. அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதற்கு சிரமப்பட்டு பெண்கள் இரவிலே கோலம் போட்டு விடுவார்கள். இதனால் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய் விடும். அதுமட்டுமின்றி இரவில் கோலம் போட்டால் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் குறையும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியது

இந்த மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டில் மந்திரங்கள் ஜெபங்கள் போன்றவற்றை ஒலிக்க விட்டு கேட்பது வீட்டிற்கு நல்ல சுபிட்சத்தை தேடி தரும். அது மட்டும் இன்றி பெருமாளுக்கு உகந்த இந்த மாதத்தில் திருப்பாவை, திருவெண்பாவை, திருப்பள்ளி எழுச்சி போன்ற பக்தி பாடல்களை படிப்பது மிகவும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே: எதிரிகளின் தொல்லை நீங்க கடுகு தாந்திரீகம்

மார்கழி மாதத்தில் செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை போன்ற தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொண்டு இருப்பீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் நீங்களும் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை செல்வ வளமானதாக மாற்றிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -