பனிக்காலத்தில் உண்டாகும் சளி, இருமல் பிரச்சினையை மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்த இந்த பாரம்பரிய மருந்து குழம்பை உடனே செய்து சாப்பிட்டு பாருங்கள்

milagu-puundu-kuzhambu
- Advertisement -

பனி காலம் வந்தவுடன் பலருக்கும் சளி பிடிக்க ஆரம்பித்துவிடும். காலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும் மிகவும் சுலபமாக சளி பிரச்சனை உண்டாகும். அதிலும் இப்பொழுது காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனை ஆங்காங்கே அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இது போன்ற நேரங்களில் மருத்துவமனைக்குச் செல்வதைவிட முதலில் வீட்டிலேயே அவற்றை குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நாம் உண்ணும் உணவின் மூலம் இதனை சரி செய்ய முயற்சிக்கலாம். அதற்காக நமது கிராமப்புறங்களில் செய்து சாப்பிடும் இந்த காரசாரமான மருந்து குழம்பை ஒருமுறை நீங்களும் சமைத்து சாப்பிட்டு பாருங்கள். சளி பிரச்சனை அடியோடு மறைந்து விடும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மிளகு – 3, ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன், துவரம்பருப்பு – 2 ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன், பச்சரிசி – அரை ஸ்பூன், தனியா – 2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், பூண்டு – 15 பல், வரமிளகாய் – 6, சின்ன வெங்காயம் – 20, புளி – நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் – 8 ஸ்பூன், மஞ்சள் – தூள் அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

மருந்து குழம்பு செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, அதில் ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் பச்சரிசி, கால் ஸ்பூன் வெந்தயம்,அரை ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு, அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, இரண்டு ஸ்பூன் தனியா, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஆறு வர மிளகாய், 7 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் இவற்றுடன் புலி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மீண்டும் அதே கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் 10 சின்ன வெங்காயம், 8 பல் பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் குழம்பிற்க்கு ஏற்ற அளவு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் பொடி சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -