சளி, இருமலுக்கு மருந்து குழம்பு

marunthu kulambu
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து என்ற வகையில் தங்களுடைய உணவுகளை ஆரோக்கியமான முறையிலும் தங்கள் உடல் நலனை பாதுகாக்கும் முறையிலும் அருந்தி வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவை அனைத்தையும் நாம் மறந்து விட்டதால் தான் பல நோய்களுக்கு ஆளாகிறோம். அதிலும் மிகவும் குறிப்பாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அதிகமாக வாட்டியெடுக்கும். அந்த சூழ்நிலையில் வீட்டில் இந்த மருந்து குழம்பை வைத்துக் கொடுப்பதன் மூலம் இந்த நோய்களிலிருந்து எளிதில் தப்பிக்க முடியும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மருந்து குழம்பு வைக்கும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் என்றதும் நாம் மருத்துவரிடம் சென்று அதற்குரிய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். ஆனால் நம் முன்னோர்கள் இந்த சளி, இருமலை போக்குவதற்கு வீட்டிலேயே மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் என்று மருத்துவ குணம் மிகுந்த பொருட்களை வைத்து குழம்பு செய்து சாப்பிடுவார்கள். ரசம் வைத்து சாப்பிடுவதை விட இந்த மாதிரி மருந்து குழம்பு செய்து சாப்பிடும் பொழுது அதன் பலன் விரைவிலேயே தெரியும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
  • மிளகு – 1 1/2 ஸ்பூன்
  • சீரகம் – 1 1/2 ஸ்பூன்
  • வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • பூண்டு – 20 பல்
  • சின்ன வெங்காயம் – 25
  • வர மிளகாய் – 2
  • தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • உளுந்து – 1/4 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • மல்லித்தூள் – 2 ஸ்பூன்
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மிளகு, சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம், ஒரு கொத்து கருவேப்பிலை, 5 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம், வரமிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாக வதக்கி ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறிய இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மறுபடியும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை இவற்றை போட வேண்டும். கடுகு நன்றாக வெடித்ததும் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயமும், பூண்டும் வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

அப்பொழுது தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்றி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதை குறைந்த தீயில் வைத்து விட வேண்டும். ஊற்றிய எண்ணெய் மேலே பிரிந்து தனியாக வரும் அளவிற்கு கொதிக்க விட வேண்டும். அருமையான மருந்து குழம்பு தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: கருப்பு உளுந்து கஞ்சி

லேசாக சளி, இருமல் இருக்கும் பொழுதே இதைப் போன்ற மருந்து குழம்பு வைத்து கொடுப்பதன் மூலம் சளி உடலில் இருந்து எளிதாக வெளியேறி பாதிப்பை குறைக்கும்.

- Advertisement -