பெண்களின் ஆழ்மனதில் இருக்கும் கவலைகளை இந்த செடியிடம் ஒரு முறை சொல்லிப் பாருங்கள். உங்கள் மனபாரமும் குறையும். கவலையும் காணாமல் போகும்.

women
- Advertisement -

பொதுவாகவே நமக்கு இருக்கும் கஷ்டங்களை இன்னொரு மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதை விட, ஓரறிவு உள்ள மரம் செடி கொடிகளிடம் பகிர்ந்து பாருங்கள். கஷ்டமும் மனக்கவலையும் பாதியாக குறையும். ‘செடிகளுக்கு காது கேட்குமா. செடியிடம் போய் கஷ்டங்களை சொல்லுவதற்கு’ என்று நிறைய பேர் யோசிக்கலாம். ஆனால் வீட்டில் வளர்க்கக்கூடிய செடி கொடிகளிடம் நாம் ஆசையாக பேசும் போது அது வேகமாக வளர்வதை உணர முடியும். செடி கொடிகளுக்கு உயிர் உண்டு. நாம் பேசுவதை கேட்க கூடிய திறன் உண்டுங்க. வேணுமுன்னா உங்க வீட்டில் வளர்க்கும் செடி கொடிகளிடம் நீங்கள் கொஞ்ச நேரம் பேசித்தான் பாருங்களேன். முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.

சரி விஷயத்திற்கு வருவோம். பெண்கள் மனநிலை சரியில்லாத சமயத்தில் எந்த செடியிலும் தங்களுடைய மனவருத்தத்தை தெரிவிப்பது‌. மருதாணி செடி. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக ஒரு சிறிய தொட்டியிலாவது மருதாணி செடியை வளர்க்க வேண்டும். இது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். இப்படி வளரக்கூடிய செடியிலிருந்து மருதாணி இலைகளை பறித்து வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் கையில் இட்டுக் கொள்ள வேண்டும். முடிந்தால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை வரும் சமயத்தில் இந்த மருதாணி இலைகளை அரைத்து கையில் இட்டு கொள்ளலாம்.

- Advertisement -

மருதாணி இலைகளை பறித்து அரைக்கும் போது, அதில் கிராம்பும் கொட்டைப்பாக்கும் கட்டாயம் சேர்க்க வேண்டும். இது நிறத்தை அதிகரிப்பதோடு சேர்த்து, நம்முடைய கைக்கு லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை இரவு 8.00 இருந்து 9.00 மணிக்குள் சுக்கிர ஹோரை. உங்களுடைய வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய கையிலும் குறிப்பிட்ட சுக்கிர ஹோரையில் இப்படி மருதாணி இலைகளை அழகாக அரைத்து இட்டு விடுங்கள். வீட்டிற்கு நல்ல சுபிட்சம் கிடைக்கும்.

சில நேரங்களில் பெண்களுக்கு தாங்க முடியாத மனபாரம் இருக்கும். யாரிடம் கஷ்டத்தை சொல்லி அழுவது என்ற கவலை இருக்கும். அப்படி இருக்கும்போது உங்கள் வீட்டு மருதாணி செடியின் அருகில் அமர்ந்து, உங்களுடைய கஷ்டங்களை அழுது புலம்பாதிங்க. இப்படி கஷ்டம் இருக்குது. இதெல்லாம் சரியாகிவிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு அந்த மருதாணி செடியிடம் வாய்விட்டு பேசினாலும் சரி, அல்லது மானசீகமாக மனதோடு மனது பேசினாலும் சரி. அது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் பேசுவதை மருதாணி செடி கேட்கும். உங்கள் கஷ்டத்திற்கு உண்டான தீர்வையும் கூடிய சீக்கிரத்தில் அந்த மருதாணி செடி தரும்.

- Advertisement -

சீதை ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட பின்பு, அசோகவனத்தில் தங்கி இருந்தபோது, அந்த இடத்திலிருந்த ஒரு மருதாணி செடியிடம் தான், தினமும் தன்னுடைய கஷ்டங்களை சொல்லுவாங்களாம். அந்த மருதாணி செடி, சீதையின் கஷ்டங்களை எல்லாம் பொறுமையாக கேட்டதாக ஒரு புராண கதையும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. தன்னுடைய சோகத்தை பொறுமையாக கேட்ட மருதாணி செடியை பற்றி சீதை, ராமரிடம் சொல்லி மருதாணி செடிக்கு வரம் வாங்கி கொடுத்ததாகவும், அந்த வரத்தின் மூலமாகத்தான் மருதாணி இலைகளை பறித்து அரைத்து பெண்கள் கையில் வைத்துக் கொண்ட உடன் பெண்களுக்கு சந்தோஷமும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கப் பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஆக ஒவ்வொரு வீட்டிலும் மருதாணி செடியை வளர்ப்பது நல்லது. தினமும் அந்த மருதாணி செடிக்கு தண்ணீர் ஊற்றி ஆசையோடு பேசினாலே போதும். வீட்டில் நல்லது நடக்கும். மனதில் சந்தோஷம் பிறக்கும் என்ற இந்த கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -