உங்கள் வீட்ல மருதாணி செடி இருந்தா இதை மட்டும் செய்ய மறக்காதீங்க! மருதாணியின் மகத்துவங்கள்.

maruthani-cash-lakshmi
- Advertisement -

பெரும்பாலான வீடுகளில் மருதாணி செடி நிச்சயம் இருக்கும். மருதாணி, மாதுளை, துளசி, நெல்லி போன்ற செடிகள் மகாலட்சுமியின் அம்சத்தை பிரதிபலிக்கிறது. இந்த செடிகள் ஒவ்வொன்றும் மகாசக்தி பொருந்தியவை. மருத்துவம் மற்றும் ஆன்மீகம் இரண்டிற்கும் மாபெரும் அற்புதப் பலன்களை அள்ளி கொடுக்கும் இந்த செடிகள் வீட்டில் இருந்தால் நிச்சயம் வீட்டில் செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது. அதனை வீட்டில் வைத்திருந்தால் மட்டும் போதாது வேறு என்ன செய்ய வேண்டும்? என்பதையும் மருதாணியின் மகத்துவங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

karunthulasi2

துளசிச் செடியை வீட்டில் வைத்திருந்தால் கட்டாயம் அதற்கு தினமும் விளக்கேற்றி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு மூன்று முறை துளசி செடியை சுற்றி வலம் வந்து துளசி தேவியிடம் எதை கேட்டாலும் நீங்கள் அதனை அன்றைய நாளில் அடையலாம் என்பது நம்பிக்கை. அந்த வகையில் மாதுளை, நெல்லி மற்றும் மருதாணி ஆகிய செடிகளுக்கும் கேட்ட வரங்களை கேட்டபடி கொடுக்கும் அற்புதமான சக்தி உண்டு.

- Advertisement -

மாதுளை குச்சி ஒன்றை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் எல்லாம் வைத்துக் கொண்டால் போதும். பணவரவிற்கு பஞ்சம் இல்லாமல் பெருகிக் கொண்டே செல்லும். மாதுளை குச்சிக்கு அத்தகைய சக்தி உண்டு. தெய்வீக ஆற்றல்களை கொண்டுள்ள இத்தகு செடிகள் வீட்டில் இருந்தால் அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி ஊதுபத்தியாவது காண்பிக்க வேண்டும். நெல்லி மரத்தை நட்டு வளர்ப்பவர்களுக்கு இழந்த செல்வம் எல்லாம் மீண்டும் கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு. செல்வாதிபதி குபேரன் கூட தன்னுடைய இழந்த செல்வம் மற்றும் இழந்த நாடு, நகரமெல்லாம் மீண்டும் பெற நெல்லிக்கனியை வளர்த்தாராம்.

nelli-maram

எனவே உங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்தால் அதற்கு சந்தன, குங்குமம் இட்டு துளசியைப் பூஜிப்பது போல ஒரு பூஜையை போட்டு விடுங்கள். இதனால் எல்லா செல்வங்களையும், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். மேலும் மருதாணி செடி மகத்துவ பலன்களை பெற புராணக்கதை ஒன்று உண்டு. இலங்கையில் சீதாதேவி சிறைப்பட்டிருந்த பொழுது அவர் இருந்த இடத்திற்கு அருகில் மருதாணி செடி ஒன்று இருந்தது.

- Advertisement -

சீதையை மீட்க ராமன் வரும் பொழுது மருதாணி செடியிடம் இருந்து விடைபெற்ற சீதாதேவிக்கு மருதாணி செடியை பார்த்து மிகவும் வருத்தமாம். இத்தனை நாட்கள் என்னுடைய சுக துக்கங்களை உன்னுடன் தான் பகிர்ந்து கொண்டேன். என்னுடைய எல்லா கஷ்டங்களையும், உன்னிடம் தான் புலம்பித் தீர்த்தேன். இன்று உன்னை விட்டுப் பிரிவது எனக்கு வேதனையாக இருக்கிறது என்றும், உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்றும் கூறினார். உங்களுடைய இந்த மகிழ்ச்சி தான் எங்களுக்கு தேவை. நீங்கள் சிந்தும் இந்த புன்னகை ஒன்றே எனக்கு போதும் என்று மருதாணி செடி கூறியதாம்.

maruthani 2-compressed

மருதாணி செடியின் இந்த பேரன்பின் காரணமாக சீதாதேவி அதற்கு உன்னை யார் வீட்டில் வளர்த்து பூஜை செய்கிறார்களோ, உன்னை யார் கைகளில் இட்டுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் இருக்கும் என்று வரம் கொடுத்தாராம். அதனால் தான் திருமண வைபவங்களில், திருவிழா, விசேஷங்களில் கூட பெண்கள் கைகளில் மருதாணியை இட்டுக் கொண்டு அழகு பார்த்து வருகின்றனர். பெண்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டால் அவர்களிடம் மகிழ்ச்சி என்பது தானாகவே தொற்றிக் கொள்ளும். மேலும் செல்வ செழிப்புக்கு குறைவில்லாமல் பணம் கைகளில் நிலையாகத் தங்கும். அதே போல மருதாணி செடியை வீட்டில் வைத்திருப்பவர்கள் எப்பொழுதும் ஒரு ஊதுபத்தி காண்பித்து வழிபட்டு அதனை பூஜித்து வந்தால் நிச்சயம் உங்களுக்கு மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -