இந்த 1 இலையை இப்படி செய்தால் எந்த ஒரு காரியமும் தடையின்றி வெற்றி அடையும்! வீட்டிலும் செல்வம் பெருக செய்யும்.

maruthani-lakshmi

இந்த ஒரு செடியுடைய இலை இவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியுமா? என்றால் கேட்பதற்கு ஆச்சரியமாக தான் இருக்கும். முந்தைய காலத்தில் இந்த செடி கிட்டத்தட்ட எல்லோருடைய வீட்டிலும் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். இன்றும் பெரும்பாலான வீடுகளில் இந்த செடி நிச்சயமாக இருக்கும். வெறும் அழகிற்காக மட்டுமே இந்த செடி உபயோகப் படுவதில்லை. மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்த செடி காரிய வெற்றி, செல்வ வளத்தை அதிகமாக நமக்கு கொடுக்கும். அதை வைத்து என்ன செய்வது? அது என்ன செடி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

maruthani 2-compressed

ராமர், சீதாதேவி காலத்திலிருந்தே இந்தச் செடிக்கு விசேஷமான பலன்கள் உண்டு. அது வேறு எந்த செடியும் இல்லை. நம் எல்லோருக்குமே மிகவும் பிடித்த மருதாணி செடி தான். மருதாணியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த ஒரு செடி மட்டும் வீட்டில் எந்த ஒரு திசையிலும் வைத்து வளர்க்கலாம். தோஷம் இல்லாத மருதாணி செடி மிகவும் மகத்துவமானது.

மருதாணி செடியின் இலைகளை பறித்து வேறு எந்த ஒரு பொருளையும் அதனுடன் சேர்க்காமல் அரைத்து மாதம் ஒரு முறையாவது பெண்கள் கைகளில் இட்டுக் கொண்டால் அவர்களுடைய கைகளில் எப்பொழுதும் மகாலட்சுமி வாசம் செய்வாள். மருதாணி வைக்கப்படும் கைகளில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். காரிய தடை என்பது இருக்கவே இருக்காது. சுபகாரியங்களில் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வதற்கும் இதுவே காரணமாகும். வெறும் அழகிற்காக மட்டு மருதாணி இடப்படுவதில்லை. அதில் இருக்கும் அதிர்வலைகள் ஒரு விதமான உற்சாகத்தைக் கொடுக்கும்.

maruthani 3-compressed

தினமும் மருதாணி இலையை அரைத்து வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், மாதம் ஒரு முறையாவது பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டால் உங்களுடைய கைகளில் பணம் விரயமாகாமல் தங்கும். வீட்டின் நிர்வாகத்தை எடுத்து நடத்தும் பெண்கள் இதனை கடைபிடிப்பது நல்ல பலன்களை கொடுக்கும். சுபகாரிய தடை இருக்கும் பெண்களும் இதனை செய்வதால் காரியத்தடை நீங்கி சுபகாரியங்கள் கைகூடும்.

- Advertisement -

மருதாணி செடி உடைய இலைகளை வேப்பிலையுடன் சேர்த்து சிறிதளவு வண்டி, வாகனங்களில் வைத்துக் கொண்டால் எந்த ஒரு திருஷ்டி தோஷமும் அணுகாது. வீட்டின் கேட்டிலும் மருதாணி மற்றும் வேப்பிலை சேர்த்து சொருகி வைக்கலாம். நல்ல ஒரு வைப்ரேஷன் உருவாகும். வீட்டில் துஷ்ட சக்திகள் இருந்தாலும் வெளியேறிவிடும். உங்கள் வீட்டில் மருதாணி செடி இருந்தால் கட்டாயம் இதனை செய்து பாருங்கள் எவ்வளவு சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் அவைகள் படிப்படியாக நீங்கிவிடும்.

maruthani vidhai

மருதாணி செடியின் விதைகளை நீங்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடும் பொழுது சேர்த்துப் போட்டால் அதனுடைய வாசம் வீடு முழுவதும் பரவி நல்ல அதிர்வுகளை உண்டு பண்ணும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதுவும் அங்கு பலிப்பதில்லை. உடம்பில் ஒருவித சோர்வுடன் எப்பொழுதும் காணப்படும் பொழுது இந்த தூபத்தை போட்டு பார்க்கலாம். இதனுடன் வெண்கடுகு சேர்த்து தூபம் போடும் பொழுது உடலில் இருக்கும் துர் சக்திகள் நீங்கி சுறுசுறுப்பு அடைவீர்கள்.

maruthani

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும், குழந்தைகள் கூட மருதாணியை வைத்துக் கொள்ளலாம். உள்ளங்கையில் வட்ட வடிவில் ஒரே ஒரு துளி இவர்கள் வைத்துக் கொண்டாலும் போதும்! நல்ல ஒரு பணவரவு இருந்து கொண்டே இருக்கும். தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் மருதாணி இலைகளை வைப்பது விருத்தியை உண்டாக்கும். பணம் கொழிக்கும் இடங்களில் இருக்கும் கண் திருஷ்டிகள் நீங்கி நல்ல முன்னேற்றம் காணப்படும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் தரும் துளசிச் செடியுடன் இந்த 2 செடியும் சேர்ந்து இருந்தால் வறுமை நீங்கி பணம் கொழிக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.