உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் தரும் துளசிச் செடியுடன் இந்த 2 செடியும் சேர்ந்து இருந்தால் வறுமை நீங்கி பணம் கொழிக்கும்!

thulasi-cash

மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் துளசிச் செடி வீட்டில் இருப்பது என்பது அதிர்ஷ்டமான ஒன்றாகும். தினமும் துளசி செடிக்கு விளக்கேற்றி வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கும் என்பார்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறுவதை கேட்டிருப்போம். அது போல் நமக்கு வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே தடுத்துவிடும் ஆற்றல் இந்த துளசி செடிக்கு உண்டு. இறைவனே நம்முடன் இருந்து கொண்டு பாதுகாப்பை தருவதாக ஐதீகம் உள்ளது. இத்தகைய துளசிச் செடியுடன் இந்த 2 செடிகளையும் சேர்த்து வளர்த்தால் மேலும் நம்முடைய அதிர்ஷ்டம் பெருகும். அவை என்ன? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.

thulasi chedi

நீங்கள் துளசி செடியை வளர்த்து வந்தால் உங்கள் வீட்டில் எந்த ஒரு துஷ்ட சக்தியும் அணுகுவதில்லை. அதையும் மீறி உங்களுக்கு தீவினைகள் வரப்போகிறது என்றால் அது உங்களை தாக்குவதற்கு முன்பாகவே இந்த துளசிச் செடி அதனை ஈர்த்துவிடும். துளசி செடி நன்கு ஆரோக்கியமாக இருந்தால் கூட, சில நேரங்களில் வாடிப்போய் பட்டுப் போய்விடும். அது இது போன்ற காரணங்களால் உண்டாகிறது ஆகும். உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை துளசிச்செடி ஆனது ஏற்றுக் கொண்டு மடிந்து விடுகிறது. இதனால் அனைவருடைய வீட்டிலும் துளசி செடி இருப்பது மிகவும் நல்லது.

மேலும் தினமும் துளசிக்கு மாலை வேளைகளில் விளக்கு ஏற்றி துளசி பூஜை செய்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. துளசி தாயாரை சரணடைந்தால் பிறவி இல்லாத முக்தி கிடைக்கும். முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு இந்த ஜென்மத்திலேயே அவர்களுக்கு அத்தனை பலன்களும் கிடைத்து விடுவதாக கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு மறு ஜென்மம் என்பது கிடையாது. துளசிச் செடியுடன் ஆரோக்கியத்திலும், ஆன்மீகத்திலும் அதிகம் பங்கு வகிக்கும் கற்பூரவள்ளி செடியையும் சேர்த்து வளர்த்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.

karpooravalli

கற்பூரவள்ளி என்பதும் துளசி வகையை சார்ந்தது தான். துளசியை விட கற்பூரவள்ளி ஆரோக்கியத்தில் அதிக பலன்களைக் கொடுக்கும். தினமும் கற்பூரவள்ளி இலை சாறு எடுத்து ஒரு பாலாடை பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுத்து வர, சளி தொல்லை, இருமல் போன்ற எந்த ஒரு தொந்தரவும் ஏற்படுவதில்லை. தினமும் 10 கற்பூரவள்ளி இலைகளை பெரியவர்கள் சாப்பிட்டு வர நோய் நொடி இன்றி சுறுசுறுப்பாக இருக்கலாம். அத்தகைய கற்பூரவள்ளி செடியை துளசியுடன் சேர்த்து வைத்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

- Advertisement -

மேலும் இவற்றுடன் கருந்துளசி எனப்படும் இன்னொரு துளசி வகையும் உண்டு. சாதாரண துளசியைப் போலவே இருக்கும் இந்த துளசியின் இலைகள், தண்டு, பூ, காய் கருமையான நிறத்தில் காட்சி தரும். பச்சையாக இருக்காது எனவே அதை கருந்துளசி என்பார்கள். செம்பு அல்லது பஞ்சலோக பாத்திரத்தில் கருந்துளசி இலைகளை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற விட்டு மறுநாள் காலையில் அருந்தினால் சளி, கபம், நோய்தொற்று, துர்நாற்றம் போன்றவை நீங்கி தேகம் இளமையான தோற்றத்தில் பட்டுப் போல் மிளிரும்.

karunthulasi

மேலும் இறைவனுடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். வறட்சியைத் தாங்கக் கூடிய கருந்துளசி எளிமையாக வளரும். எனவே துளசியுடன் கருந்துளசி மற்றும் கற்பூரவள்ளி ஆகிய இரண்டு செடிகளையும் சேர்த்து வளர்த்தால் இறையருளும், ஆரோக்கியமும் எப்போதும் அதிகமாகவே உங்களுக்கு இருக்கும். வீட்டில் பணமும், செல்வமும் கொழிக்கும் யோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
இடுப்பில் அல்லது காலில் கருப்பு கயிறு கட்ட போறீங்களா? அப்படின்னா இதை தெரிஞ்கிட்டு அப்புறமா கட்டிக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.