உங்களுக்கும் ரத்த சிவப்பு நிறத்தில் மருதாணி கைகளில் சிவக்க, மருதாணி அரைக்கும் பொழுது இந்த 3 பொருட்களை சேர்த்தால் போதுமே!

maruthani-tips
- Advertisement -

மருதாணி யாருக்கு தான் பிடிக்காது? பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் கூட மருதாணி ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் இலையைக் கொண்டு நம் கைகளை அழகுபடுத்தி பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் நமக்குள் ஒரு புத்துணர்வும், உற்சாகமும் தொற்றிக் கொள்கிறது. அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மருதாணி நிறையவே நன்மைகளை செய்யக்கூடியது. இந்த மருதாணி வைப்பவர்கள் கைகளில் அதிகப் பணப் புழக்கம் இருக்குமாம். இத்தகைய மகத்துவம் வாய்ந்த மருதாணி ஒரு சிலருடைய கைகளில் வைக்கும் பொழுது கொஞ்சம் கூட சிவக்கவே செய்யாது.

maruthani

ஒரு சிலருடைய கைகளில் நன்கு அடர்த்தியான நிறத்தில் செக்கச்செவேலென்று சிவந்து இருக்கும். அவர்களைப் பார்க்கும் பொழுது நமக்கு சற்று பொறாமையாக தான் இருக்கும். நமக்கும் அதே போல ரத்த சிவப்பு நிறத்தில் செக்கச் செவேலென மருதாணி சிவக்க மருதாணி அரைக்கும் பொழுதே இந்த மூன்று பொருட்களை சேர்த்து அரைத்தால் போதும். அது என்ன பொருட்கள்? எப்படி மருதாணி அரைக்க வேண்டும்? என்கிற சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

மருதாணியை எப்பொழுதும் இயற்கையாக இலைகளை மரத்தில் இருந்து பறித்து அரைத்து தான் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நமக்கு கைகளில் எவ்விதமான அலர்ஜியும் உண்டாகமல் பாதுகாப்பானதாக இருக்கும். மருதாணி செடி வைத்திருப்பவர்கள் இல்லத்தில் லக்ஷ்மி கடாட்ஷம் எப்பொழுதும் நிறைந்து காணப்படும் என்பது ஆன்மீக கூற்று. கைகளில் மருதாணி வைத்திருந்ததால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது நியதி.

marudhani

நீங்கள் மருதாணி அரைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தான் இலைகளை சேர்த்து அரைக்க வேண்டும். மருதாணியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம். மருதாணி இலைகளை அரைக்கும் பொழுது தண்ணீரை ஸ்பூன் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்க வேண்டுமே தவிர, தண்ணீரை அதிகமாக ஊற்றி விடக்கூடாது. மருதாணி அரைக்கும் பொழுது அரை மூடி எலுமிச்சை சாற்றை கலந்து அரைத்தால் கைகளில் வைத்தவுடன் மருதாணி உதிர்ந்து விடாமல் அப்படியே ஒட்டிக் கொண்டுவிடும். நிறமும் செக்கச் செவேலென அசத்தலாக நமக்கு கொடுக்கும்.

- Advertisement -

மேலும் இரண்டு கிராம்பு சேர்த்து மருதாணி இலைகளை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கிராம்பு சேர்ப்பதாலும் மருதாணி இலைகள் நமக்கு அடர்த்தியான நிறம் கொடுக்கும். சாதாரணமாக குங்குமம் கொண்டு அரைக்கும் பொழுது கொஞ்சம் வெள்ளை சர்க்கரையை சேர்த்து அரைப்பது உண்டு. அப்போது தான் நீண்ட நேரம் அந்த நிறம் நம் கைகளை விட்டு நீங்காமல் இருக்கும். அதே போல மருதாணி இலைகளை அரைக்கும் பொழுதும் ஒரு ஸ்பூன் அளவுக்கு வெள்ளை சர்க்கரை சேர்த்து அரைக்க வேண்டும். மூன்று கைப்பிடி மருதாணி இலைகளோடு ஒரு ஸ்பூன் சர்க்கரை சரியாக இருக்கும்.

maruthani2

இப்படி மருதாணி இலைகளை அரைக்கும் பொழுது கிராம்பு, சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு இந்த மூன்று பொருட்களை சேர்த்து பதமாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மருதாணி இலைகளை அரைத்து பின்னர் கெட்டியாக கலந்து விட்டு பின்னர் உங்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டு பாருங்கள். கொஞ்சம் கூட சிவக்கவே செய்யாத கைகளுக்கு கூட அடர்த்தியான நல்ல ரத்த சிவப்பு நிறம் கிடைக்கும். மருதாணி வைத்துக் கொண்டால் நம் மனதிலிருக்கும் உளைச்சலும் நீங்கும். எனவே இதே முறையில் மருதாணி அரைத்து நீங்களும் பயனடையலாமே!

- Advertisement -