வெறும் 10 நிமிடத்தில் பாவ் பஜ்ஜி சுவையில், மசாலா பிரட் டோஸ்ட் எப்படி செய்வது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த யம்மியான டிஷ்ஷை விருப்பமாக சாப்பிடுவார்கள்.

bread
- Advertisement -

பிரட்டில் ஏதாவது ஒரு மசாலாவை தடவி மணக்க மணக்க சமைத்து கொடுத்து விட்டால் போதும். என்ன ஏது என்று கேட்காமல் அதை குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். பெரியவர்களும் அப்படித்தான். கொஞ்சம் ருசி, கொஞ்சம் பார்பதற்கு அழகு, சேர்ந்தது தானே சமையல். இப்போதெல்லாம் சுவைப்பதற்கு ருசி இல்லை என்றால் கூட, பார்ப்பதற்கு அழகாக இருந்தால் போதும். விருப்பமாக சாப்பிடுகிறார்கள். எப்போதும் போல ஒரே மாதிரி சமைக்காமல் கொஞ்சம் ட்ரெண்டா வித்தியாசமாக ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் இப்படியும் நம்முடைய வீட்டில் சமைத்தால், சாப்பாடு கொஞ்சம் போர் அடிக்காமல் இருக்கும். வாங்க மசாலா பிரட் ரோஸ்ட் மிக மிக சுவையாக எப்படி செய்வது, அதுவும் பாவ் பஜ்ஜி சுவையில் இன்ட்ரஸ்டிங்கான ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் வெண்ணெய் 2 ஸ்பூன், ஊற்றிக் கொள்ளவும். தாராளமாக வெண்ணெய் ஊற்றலாம் தவறு கிடையாது. மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை 2 ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, மிகப் பொடியாக சாப் செய்த வெங்காயம் 1, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் கண்ணுக்கே தெரியாமல் காணாமல் போய்விடும். அடுத்து மிகப் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் போட்டு, உப்பு தேவையான அளவு தூவி, வதக்கவும். அடுத்தபடியாக ரொம்ப ரொம்ப பொடியாக சாப் செய்த தக்காளி பழம் ஒன்று போட்டு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் 2 ஸ்பூன் போட்டு, மீண்டும் இந்த எல்லா பொருட்களையும் நன்றாக வதக்கவும்.

தக்காளி பழம் வெங்காயம் இதெல்லாம் நன்றாக குழைந்து வதங்கி வந்தவுடன், அடுத்து இதில் கரம் மசாலா 1/4 ஸ்பூன், பாவ் பாஜி மசாலா 1 ஸ்பூன், போட்டு வதக்கி விட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதை செமி கிரவியாக செஞ்சிக்கோங்க. கொதிக்கும்போது அந்த தண்ணீர் சுண்டி இது தளதளவென வந்துவிடும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவினால், மசாலா தயார்.

- Advertisement -

இதில் பாவ் பஜ்ஜி மசாலா பொடி கட்டாயம் சேர்க்க வேண்டும். இந்த மசாலா பொடி இப்போது எல்லா டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து உங்கள் விருப்பம் போல வீட் பிரட், மைதா பிரட் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க. அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து கொஞ்சமாக வெண்ணெய் ஊற்றி, அந்த வெண்ணெய் காயும் போதே, கொத்தமல்லி தழை சிறிதளவு, பாவ் பஜ்ஜி மசாலா 2 சிட்டிகை, 2 சிட்டிகை மிளகாய் பொடி தூவி கலந்து விட்டு அதன் மேல் இரண்டு பிரெட்டை வைத்து, டோஸ்ட் பண்ணிக்கோங்க. அது லேசாக அடியில் சிவக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: யம்மி யம்மி ஸ்ட்ரீட் ஸ்டைல் ஹக்கா நூடுல்ஸ் வீட்டிலேயே செய்ய தெரியுமா உங்களுக்கு! இது ரொம்ப ஈசிங்க. வீட்டிலேயே செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுங்க.

இதற்குள் பிரட்டுக்கு மேலே நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மசாலாவை பரப்பி அப்படியே ஒரு பிரட்டுக்கு மேல், இன்னொரு பிரெட்டை வைத்து பிரெட்டை இரண்டு துண்டுகளாக நறுக்கி பரிமாறினால் சூப்பரான பாவ் பஜ்ஜி டேஸ்டில் மசாலா பிரட் தயார். இது அவ்வளவு யம்மியா இருக்குங்க. வேணும்னா ரெசிபி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -