உங்க வீட்டில் இன்னைக்கு வெரைட்டி சாதமா? உடனே இந்த சைடிஷ் செய்து கொள்ளுங்கள். அருமையான சுவையில் இருக்கும்

brinjal
- Advertisement -

கொஞ்சம் காரசாரமாக மசாலா சுவையுடன் சாப்பிட வேண்டும் என்று இருந்தால் உடனே அனைவரும் செய்வது வரைட்டி சாதம் தான். அதிலும் தக்காளி சாதம், வெஜிடபிள் சாதம் இவை இரண்டும் தான் அடிக்கடி செய்வதுண்டு. இதுமட்டுமல்லாமல் புதினா சாதம், கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், பூண்டு சாதம், மிளகு சாதம் என பல விதமான கலவை சாதங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அனைவரும் விருப்பமாகவே சாப்பிடுவார்கள். அதிலும் இவற்றுடன் தொட்டுக்கொள்ள அதற்கு ஏற்றார் போன்ற சுவையான சைடிஷ் செய்து கொடுத்தால் போதும். இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு அனைத்து கலவை சாதத்திற்கும் ஏற்ற ஒரு சுவையான கத்தரிக்காய் வறுவலை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – அரை கிலோ, எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 5, தனியா – 2 ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், துவரம்பருப்பு – 2 ஸ்பூன், சீரகம் – முக்கால் ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பேனை அடுப்பின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். பேன் சூடானதும் அதில் ஐந்து வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதனுடன் 2 ஸ்பூன் தனியா சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனுடன் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு, 2 ஸ்பூன் துவரம்பருப்பு, சேர்த்து பருப்பு அனைத்தும் சிவந்து வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு முக்கால் ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து, அதே சூட்டில் லேசாக கலந்துவிட வேண்டும். பிறகு இவற்றை நன்றாக ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அரை கிலோ கத்தரிக்காயை நீளவாக்கில் அரிந்து, தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொண்டு, இந்த எண்ணெயில் சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். பிறகு இதனுடன் உப்பு சேர்த்து கலந்து விட்டு, மூடி போட்டு, 5 லிருந்து 10 நிமிடம் வேக விட வேண்டும். பிறகு மூடியை திறந்து கத்தரிக்காய் வெந்து விட்டதா என்று பார்த்ததும், இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். 5 நிமிடம் இவற்றை நன்றாக பிரட்டி விட்டு, அடுப்பை அனைத்து விட்டால் போதும். சுவையான கத்தரிக்காய் வறுவல் தயாராகிவிடும்.

- Advertisement -