தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க! நல்லதெல்லாம் நடக்கும்.

cooking-vilakku
- Advertisement -

நீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்கள் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை பற்றிய நினைவுடன் மறுநாள் காலை துவங்கும். அப்படி இருந்தால் சமையல் எப்படி ருசிக்கும்? ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

cook1

தமிழர்கள் பழமொழியில் சமையலைப் பற்றிய இந்தப் பழமொழி அனைவரையும் சிந்திக்க வைக்கும். சமையலில் உப்பு, காரம் மட்டுமல்ல அன்பும் சேர்த்தால் தான் ருசிக்கும் என்பார்கள். சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல அதை சமைக்கின்றவர்களின் மனமும் அந்த உணவில் பிரதிபலிக்கும். அதனால் தான் எப்போதுமே எல்லோருக்கும் தன்னுடைய அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைத்த சமையல் தனியாக ருசி பெறுகிறது.

- Advertisement -

சமையலறை என்பதும் பூஜை அறைக்கு நிகரான சக்தியுள்ள அறை என்றே கூறலாம். சமையலறையில் அன்னபூரணியும், அக்னி பகவானும் வாசம் செய்கிறார்கள். நிறைய பேரது வீடுகளில் சமையலறையிலேயே பூஜை அறையும் இருக்கும். தினமும் காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது போல், உங்களுடைய சமையலறையிலும் விளக்கேற்றி வைத்து சமைப்பது மிகவும் நல்ல பலன்களை தரும் தெரியுமா?

kamatchi vilakku

சமையலறைக்கு என்றே தனியாக ஒரு விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த விளக்கிற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் கொண்டு பொட்டு வைக்க வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் அல்லது நீங்கள் பயன்படுத்தும் தீபத்திற்கு உரிய எண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றி விட்டு அன்னபூரணியை, அக்னி பகவானை மனதார வேண்டிக்கொண்டு சமையல் வேலையை துவங்க வேண்டும்.

- Advertisement -

உண்மையில் இது மிக நல்ல பலனைத் தருவதை நீங்களே பார்ப்பீர்கள். சமையல் செய்வதற்கு முன் இது போல் விளக்கை ஏற்றிவிட்டு சமையல் செய்ய ஆரம்பித்தால் அந்த சமையலில் தனி ருசி இருக்கும். நீங்கள் சமையல் செய்து முடித்தபின் குளிர்வித்து விடலாம்.

Annapoorani

சமையலறையில் நெருப்பு போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த விளக்கை ஏற்றும் பொழுது ஜாக்கிரதையாக ஏற்ற வேண்டும். சமையலறையில் எரிவாயு இருப்பதால் விளக்கை அவற்றில் இருந்து சற்று தள்ளி வைத்து ஏற்றுவது நல்லது. தீபமேற்றுவது வடக்கு அல்லது கிழக்கு திசையில் நோக்கியபடி இருக்க வேண்டும்.

- Advertisement -

pressure-cooker

இப்படி அந்த அறையில் விளக்கேற்றி வைத்து விட்டு சமையலை துவங்கினால் உங்களுடைய மனம் ஒருநிலைப்படும். செய்யும் சமையல் ஆனது அதீத ருசியைத் தரும். மேலும் அன்னபூரணியின் அருள் கிடைத்து என்றென்றும் வறுமை ஏற்படாத நிலை வரும். உங்கள் வீட்டில் தன தானியத்திற்கு பஞ்சம் வரவே வராது. மாதவிடாய் காலங்களில் இந்த தீபத்தை ஏற்றி விட்டு பின் சமையல் துவங்கலாம். அதில் எந்த விதமான தோஷமும் ஏற்பட போவதில்லை. மற்றபடி தாம்பத்ய தீட்டு, இறப்பு தீட்டு போன்ற விஷயங்களுக்கு பின் குளித்து விட்டு தீபம் ஏற்றி பின் சமையலை துவங்கலாம். தீபம் ஏற்றுவதற்கு 5 நிமிடம் கூட ஆகப் போவதில்லை. சில நாளைக்கு இப்படி செய்து பாருங்கள்.. நீங்களே உங்கள் வீட்டில் மாற்றங்கள் ஏற்படுவதை நிச்சயம் உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
வாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -