இந்த மசாலா பொடி போட்டு உருளைக்கிழங்கு வருவல் செஞ்சா மொத்த சாதமும் ஒரு நொடியில் காலியாகிவிடும்.

potato-fry
- Advertisement -

உருளைக்கிழங்கை இப்படி வறுத்து வைத்து, ரசம் சாதம் வைத்துவிட்டால் போதும். இந்த மாதிரி ஒரு உருளைக்கிழங்கு வறுவலை சைட் டிஷ் ஆக வைத்தால், எவ்வளவு சாதம் இருந்தாலும் அது நமக்கு பத்தாது. மிக மிக சுலபமான முறையில் மதியம் லஞ்சுக்கு இந்த ரசம் சாதம் உருளைக்கிழங்கு வருவல் ஒரு இன்ட்ரஸ்டிங்கான ரெசிபி. சுட சுட இந்த ரசம் சாதம், உருளைக்கிழங்கு வறுவலை தட்டிக் கொள்ள வேறு எந்த ரெசிபியும் இருக்க முடியாது. வாங்க நேரத்தைக் கடத்தாமல் சூப்பரான அந்த உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோம்.

முதலில் 1/2 கிலோ அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி, கழுவி மீடியம் சைஸில் வெட்டி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெட்டிய உருளைக்கிழங்குகளை போட்டு, உருளைக் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, 1 ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சேர்த்து உருளைக்கிழங்கை பத்து நிமிடம் போல வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு கொழகொழவென வெந்து வரக்கூடாது. பக்குவமாக வேகவைத்துக் கொள்ளுங்கள். அதாவது உருளைக் கிழங்கு முக்கால் பாகம் இந்த தண்ணீரில் வெந்தால் போதும். தண்ணீரை எல்லாம் வடி கட்டி வைத்துவிட்டு வேகவைத்த உருளைக் கிழங்கை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். வரமிளகாய் – 5, கறிவேப்பிலை – 2 கொத்து, கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுபட்ட இந்த எல்லாப் பொருட்களையும் நன்றாக ஆற வைத்து விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நமக்கு உருளைக்கிழங்கு செய்வதற்கு மசாலா பொடி தயார்.

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இடித்த பூண்டு பல் – 3, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு தாளித்து வேக வைத்த உருளைக்கிழங்கை கடாயில் போட்டு மொறுமொறுவென 4 நிமிடம் போல உருளைக்கிழங்கை எண்ணெயிலேயே வறுக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு பொடித்து வைத்திருக்கும் மசாலா பொடியை உருளைக்கிழங்குடன் சேர்த்து, மீண்டும் உருளைக்கிழங்கை நன்றாக ஃப்ரை செய்து விட வேண்டும். இறுதியாக உருளைக்கிழங்கு தேவையான அளவு உப்பு தூளை தூவி, மீண்டும் ஒருமுறை நன்றாக உருளைக்கிழங்கை வதக்கி விட்டு, பிரவுன் கலர் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

சுடச்சுட இந்த உருளைக்கிழங்கு வறுவலை ருசித்துப்பாருங்கள். அட்டகாசமான ருசியில் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -