காரசாரமான சூப்பரான மசாலா சுண்டலை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். 1 கப் டீயுடன் இந்த சுண்டலை சாப்பிட்டால், ஆஹா அத்தனை ருசி!

masala-sundal
- Advertisement -

சுண்டல் என்றால் சாதாரணமாக எல்லோர் வீட்டிலும் செய்வது தான். ஆனால் இந்த சுண்டல் அப்படி கிடையாது. கொஞ்சம் வித்தியாசமாக மசாலா பொருட்களை சேர்த்து காரசாரமாக ஸ்பைசி சுண்டலை எப்படி செய்வது என்று தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு டீ யுடன் இந்த சுண்டலை சாப்பிட்டால் வயிறு அத்தனை திருப்தி ஆகும். சுடச்சுட  இந்த சுண்டலை சாப்பிட்டுவிட்டு, அதன் பின்பு டீ அல்லது காபியை குடித்து பாருங்கள். வேறு என்ன வேண்டும் மனிதனுடைய நாவிற்கு இதைத்தவிர. சரி ரெசிபிக்கு போகலாம் வாங்க.

sundal1

முதலில் 1/4 கிலோ அளவு வெள்ளை கொண்டைக்கடலையை தண்ணீரில் போட்டு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த கடலையை குக்கரில் போட்டு கொண்டைகடலை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து 4 விசில் விட்டு இந்த கொண்டை கடலையை நன்றாக வேகவைத்து, தண்ணீரை வடித்து தனியாக எடுத்துக் வைத்து கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பூண்டு – 6 பல், சீரகம் – 1 ஸ்பூன், வறமிளகாய் – 2 இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

sundal3

இப்போது சுண்டல் தாளிக்க செல்லலாம். அடுப்பில் கடாயை வைத்து கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 இந்த எல்லாப் பொருட்களையும் கடாயில் சேர்த்து ஒரு முறை வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் பாதி அளவு வதங்கியவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை, வெங்காயத்தில் கொட்டி ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, வேக வைத்திருக்கும் சுண்டலை கடாயில் கொட்டி வெங்காயத்துடன் மசாலா பொருட்களுடன் சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் சூடு செய்து மேலே கொத்தமல்லித் தழைகளைத் தூவி அப்படியே ஒரு பவுலில் போட்டு பரிமாறி பாருங்கள்.

sundal2

உங்களுக்கு இந்த சுண்டல் இன்னும் ரிச்சாக தேவைப்படும் என்றால், துருவிய ஒரு கைப்பிடி தேங்காயை இறுதியாக சுண்டலில் சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறலாம். பெரிய வெங்காயத்திற்கு பதில் 10 லிருந்து 15 பல் சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்க்கலாம். ருசி இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும்.

sundal4

சுண்டல் வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சுண்டலை இன்னும் இன்னும் வேண்டுமென்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதனுடைய சுவை அத்தனை சூப்பராக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த சுண்டலை உங்க வீட்ல கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -