நாளை(27/2/2021) ‘மாசி மகம்’ யாரை வணங்கினால் மகத்தான வாழ்வு அமையும் தெரியுமா? மாசி மக விரத சிறப்புகள் உங்களுக்காக!

masi-magam
- Advertisement -

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் அன்று இருக்கும் விரதத்திற்கு பெயர் தான் மாசி மக விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்து போய்க் கொண்டு தான் இருக்கும். ஆனால் மாசியில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே விசேஷமாக கருதப்படுவது ஏன் தெரியுமா? இன்று மதியம் 11.58 மணிக்கு தொடங்கும் மகம் நட்சத்திரம் நாளை 27/2/2021 11:33 மணி வரை நிகழ இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் இறை வழிபாடுகள் செய்யும் பொழுது மங்கள வாழ்வு பெறுவதாக புராண வரலாற்றுக் குறிப்புகள் எடுத்துரைக்கிறது. அதை பற்றிய விரிவான தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

magam-natchathiram

‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்.’ என்பது ஜோதிட பழமொழி. அதாவது மகம் நட்சத்திரத்தில் பி‌றந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் தகுதியும், திறனும் உடையவர்களாக இருப்பார்களாம். மேலும் மகம் நட்சத்திரம் ஆனது பித்ருகளுக்கு உரிய நட்சத்திரமாகவும் பார்க்கப்படுகிறது. மாசி மகம் அன்று பௌர்ணமியும் சேர்ந்து வரும். முழு பூரண சந்திரனை கொண்டுள்ள மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்நாளில் விரதம் இருந்து இறை வழிபாடுகள் செய்யும் பொழுது கேட்ட வரம் கிடைக்கிறது என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.

- Advertisement -

மாசி மகம் நட்சத்திரத்தன்று யாரை வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா? மாசி மகம் நட்சத்திரத்தன்று தான் பார்வதிதேவி பிறந்ததாக புராணக் குறிப்புகள் கூறுகின்றன. பார்வதி தேவியை மகளாக பெற வேண்டி கடும் தவம் புரிந்த தக்கனின் மகளாக பிறந்த ‘தாட்சாயினி’ பி‌றந்த தினம் மாசி மகம். எனவே சக்தியையும், சிவனையும் வணங்க சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

varuna-baghavan-1

ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் அவர் கட்டுண்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். எனவே மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது. அனைத்து உயிர்களும் பசியால் வாடியது. வருண பகவான் நீருக்குள் மூழ்கியபடி சிவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். எனவே வருண பகவானை விடுவிக்கக்கோரி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமானும் அவரை விடுவித்தார். இந்நிகழ்வு நடைபெற்றது மாசிமகம் அன்று தான்.

- Advertisement -

எனவே இந்நாள் ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் ஆனது. அதாவது இந்த நாளில் கடல், ஆறு, குளம் போன்ற ஓடும் நீர் நிலைகளில் நீராடுவது சகல தோஷங்களையும் போக்கவல்லது. செய்த பாவங்களுக்கு பாவ விமோசனம் பெற, மாசி மகம் அன்று புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவதும், புனித நீராடல் புரிவதும் நன்மைகளை அளிக்கும். மேலும் பித்ருக்களுக்கு உகந்ததாக இருப்பதால், நதி, கடல் போன்ற நீர்நிலைகளில் பித்ரு தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசி கிடைக்க செய்யும்.

Astrology ketu

ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாவார். எனவே இந்நாளில் கேது பகவானை வழிபட அறிவாற்றல் சிறக்கும் என்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நிதியில் இருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். மாசி மகம் நட்சத்திரத்தன்று தான் முருகப்பெருமான் தன் தந்தைக்கு உபதேசம் செய்தார். ஆகவே முருகப் பெருமானையும் இந்நாளில் வழிபடுபவர்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

sivan-temple

பெருமாள் வராக அவதாரம் புரிந்து பாதாளத்தில் சிக்கிக் கொண்டிருந்த பூமியை மீட்டெடுத்த நாளும் மாசி மகம் நட்சத்திரத்தன்று தான். எனவே பெருமாளை வழிபட்டாலும் இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகவே இந்நாளில் புனித தீர்த்தங்களில் நீராடி, உபவாசமிருந்து குலதெய்வத்தையும், பித்ருக்களையும், இஷ்ட தெய்வங்களையும் என்ற அனைத்து விதமான வழிபாடுகள் செய்வதும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆகவேதான் மாசிமகம் மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் விரதமிருந்து சிவன் கோவிலுக்கு சென்று தேவாரம், திருவாசகம் பாடுபவர்களுக்கு பாவங்கள் நீங்கி செல்வ செழிப்பான சுகபோக வாழ்க்கை அமைவதாக ஐதீகம் உள்ளது. எனவே மாசி மக விரதத்தை தவறவிடாமல் பயன்படுத்தி பலன் பெறலாம்.

- Advertisement -